#AsiaCup2022: இந்திய அணியில் ஜடேஜா விலகல்..புதிய வீரர் சேர்ப்பு!

Default Image

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் காயம் காரணமாக ரவீந்திர ஜடேஜா விலகல் என பிசிசிஐ அறிவிப்பு.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 6 அணிகள் கொண்ட ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் போட்டிகள் துபாய் மற்றும் ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், முதல் சுற்று போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியாவை பொறுத்தவரை பாகிஸ்தான் மற்றும் ஹாங் காங் ஆகிய இரண்டு அணிகளுடன் விளையாடி வெற்றி பெற்று சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

இந்த நிலையில், ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா விலகியுள்ளார் என பிசிசிஐ அறிவித்துள்ளது. ரவீந்திர ஜடேஜாவுக்கு வலது முழங்காலில் காயம் ஏற்பட்டதால், அவர் போட்டியில் இருந்து விலகினார். அவர் தற்போது பிசிசிஐ மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் உள்ளார்.

இதனால் ஆசிய கோப்பை இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜாவுக்கு பதிலாக மற்றொரு ஆல் ரவுண்டரான அக்சர் படேல் சேர்க்கப்பட்டுள்ளார் என்றும் அக்சர் படேல் முன்னதாக அணியில் காத்திருப்பு வீரர்களில் ஒருவராக இருந்த நிலையில், விரைவில் துபாயில் இந்திய அணியில் இணைவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிய கோப்பைக்கான இந்திய அணி: ரோகித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ஆர்.அஷ்வின், யுஸ்வேந்திரா சாஹல், ரவி பிஷ்னோய், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்