ஆசிய கோப்பை இறுதி போட்டி.! 66 ரன்கள் எனும் ‘இமாலய’ இலக்கை இந்திய அணிக்கு நிர்ணயித்த இலங்கை அணி.!
20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு இலங்கை மகளிர் அணி 65 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது. 66 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி வீராங்கனைகள் விளையாடி வருகின்றனர்.
மகளிர் ஆசியக்கோப்பை டி20 தொடரின் இறுதிப்போட்டியில், இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன. வங்கதேசத்தின் சீல்ஹெட் மைதானத்தில் இந்த இறுதி போட்டி நடைபெறுகிறது. இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதனைத்தொடர்ந்து களமிறங்கிய இலங்கையின் தொடக்க ஆட்டக்காரர்கள் கேப்டன் சாமரி அதபத்து 6 ரன்னிலும், அனுஷ்கா சஞ்சீவனி 2 ரன்னிலும் வெளியேறி இலங்கை ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தனர்.
அடுத்தடுத்து களமிறங்கிய வீராங்கனைகள் ஹர்ஷிதா மாதவிக் 1 ரன்னிலும் , நிலாக்ஷி டி சில்வாப் 6 ரன்னிலும், ஹாசினி பெரேரா 0ரன்னிலும், கவிஷா தில்ஹரிப் 1 ரன்னிலும், ஓ ரணசிங்கேப் 13 ரன்களிலும், மல்ஷா ஷெஹானி 0 ரன்னிலும் , சுகந்திகா குமாரி 6 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
இறுதியாக ரணவீர 18 ரன்கள் அடித்தும், அச்சினி குலசூரிய 6 ரன்களும் எடுத்து ஆட்டத்தில் இருந்தனர் இறுதியாக 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 65 ரன்கள் எடுத்து இருந்தது இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணி.
20 ஓவரில் 66 ரன்கள் எடுத்தால் ஆசிய கோப்பை 2022 சேம்பியன் எனும் நோக்கில் இந்திய மகளிர் அணியினர் விளையாடி வருகின்றனர் .