இந்திய அணி ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் த்ரில் வெற்றிபெற்றது
ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. 6 நாடுகள் பங்கேற்ற இந்த தொடரில் லீக் சுற்று முடிந்து ‘சூப்பர் 4’ சுற்று முடிவடைந்தது.
இறுதிப்போட்டிக்கு இந்திய அணி மற்றும் வங்கதேச அணிகள் விளையாடியது .இந்த போட்டி துபாயில் நடைபெற்றது.
இந்நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதன் பின்னர் ஆட்டத்தை தொடங்கிய வங்கதேச அணி 48.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 222 ரன்கள் அடித்தது.வங்கதேச அணியில் அதிகபட்சமாக லிட்டான் தாஸ் 121 ரன்கள் எடுத்தார்.மேலும் இது தான் ஒருநாள் போட்டிகளில் இவரின் அதிகபட்ச ரன் ஆகும்.இதனையடுத்து இந்திய அணிக்கு 223 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது வங்கதேச அணி .
இந்திய அணியின் பந்துவீச்சில் குல்தீப் 3,ஜாதவ் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.இதனையடுத்து இந்திய அணி 223 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்குடன் களமிறங்கியது.
பின்னர் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 223 ரன்கள் அடித்தது.தொடக்க வீரர் தவான் 15,ராயுடு 2 ,ரோகித் 48,கார்த்திக் 37,தோனி 36,ஜடேஜா 27,புவனேஸ்வர் 21 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.இதனால் இந்திய அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது. 7-வது முறையாக கோப்பையை கைப்பற்றியது.
ஹைதராபாத் : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த நடிகை கஸ்தூரி தற்போது ஹைதராபாத்தில்…
பீகார் : ஹாக்கியில் மகளிருக்கான 8-வது ஆசிய கோப்பைத் தொடரானது தற்போது பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடைபெற்று வருகிறது. இந்த…
மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…