Asia Cup 2023 : விடாது பெய்த மழை.! ரத்ததான இந்தியா – பாகிஸ்தான் போட்டி.! ரசிகர்கள் கடும் அதிருப்தி.!  

India vs Pakistan Asia Cup 2023

இந்த ஆண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இதில் இரண்டு போட்டிகள் முடிவடைந்து பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள், நேபாளம் மற்றும் வங்கதேச அணிகளை வென்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளன. இந்நிலையில் நேற்று மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி நேற்று நடைபெற்றது.

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.  பாபர் அசாம் தலைமைதான பாகிஸ்தான அணி பந்து வீச தயாரானது. போட்டியின் ஆரம்பத்திலேயே லேசான மழை தூரல் இருந்தது இருந்தும் பெரிய அளவு மழை பாதிப்பு இல்லாத காரணத்தால் முதல் இன்னிங்ஸ் தொடர்ந்து நடைபெற்றது.

முதல் இன்னிங்ஸில் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் முறையே 10,11, 4 , 14 ரன்களில் அவுட் ஆகி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தனர். இருந்தும் இஷான் கிஷான் சிறப்பாக விளையாடி 81 பந்துகளில் 82 ரன்கள் எடுத்திருந்தார் அதேபோல ஹர்திக் பாண்டியா 90 பந்திகளில் 87 ரன்கள் எடுத்திருந்தார். ஜடேஜா 14 ரன்கள் எடுத்து இருந்தார்.

இறுதியாக 48.5 ஓவரில் அனைத்து விக்கெட் களையும் இந்திய அணி இழந்து 266 ரன்கள் எடுத்திருந்தது. 50 ஓவரின் 267 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு பாகிஸ்தானுக்கு நிர்ணயிக்கப்பட்டது. பாகிஸ்தான் அணியின் சார்பில் ஷாகின் அப்ரிடி 4 விக்கெட்டுகளையும், நசீம் ஷா மற்றும் ஹாரிஸ் ராஃப் தலா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தனர்.

இந்திய அணி பேட்டிங் செய்து முடித்த உடனேயே மழை பெய்ய தொடங்கியது. இதனால் மைதானம் முழுதாக மழை தடுப்பு விரிப்பு மூலம் மூடப்பட்டது. மழை விட்ட ஒவ்வொரு சில மணி நேரத்திற்கும் ஒரு முறையும் நடுவர்கள் மைதானத்தை பரிசோதனை செய்தார்கள். இருந்தும் மழை தொடர்ந்து பெய்து வந்தது.

டிஎல்எஸ் முறைப்படி 30 ஓவரில் 203 ரன்கள், 20 ஓவரின் 155 ரன்கள் என நிர்ணயிக்கப்பட்டது இருந்தும், மழை தொடர்ந்து பெய்து வந்ததால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டு போட்டி ரத்தானதாக அறிவிக்கபட்டுள்ளது. இந்தியா பாகிஸ்தான் போட்டியை காண இருந்த ரசிகர்கள் பெருத்த ஏமாற்றத்தை அடைந்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்