இன்று ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்று தற்போது நடைபெற்று வருகிறது. இதில் கொழும்பு மைதானத்தில் நடைபெறும் இன்றைய ஆட்டத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, தசுன் ஷனக தலைமையிலான இலங்கை அணியை எதிர்கொண்டு விளையாடி வருகிறது.
இதில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இந்திய அணி இலங்கை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது. கிட்டத்தட்ட ஆட்டம் முடிந்துவிட்ட நிலையில் தான் மழை குறுக்கிட்ட காரணத்தால் ஆட்டம் தடைபட்டுள்ளது. தொடக்க வீரராக களமிறங்கிய ரோஹித் சர்மா இன்று தான் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 10 ஆயிரம் ரன்களை கடந்தார்.
கேப்டன் ரோஹித் சர்மா 53 ரன்கள், சுப்மன் கில் 19 ரன்கள், விராட் கோலி 3 ரன்கள், கே.எல். ராகுல் 39 ரன்கள் , இஷான் கிஷன் 33 ரன்கள், ஹர்திக் பாண்டியா 5 ரன்கள் , ரவீந்திர ஜடேஜா 4 ரன்கள் , அக்சர் படேல் 15 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்தனர்
தற்போது குல்தீப் யாதவ் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் களத்தில் நிற்கும் நிலையில் மழை குறுக்கிட்ட காரணத்தால் ஆட்டம் 47 ஓவரில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் எடுத்து இருந்தது. இலங்கை அணி சார்பாக சிறப்பாக பந்துவீசி துனித் வெல்லலகே 5 விக்கெட்களையும், சரித் அசலங்க 4 விக்கெட்களையும் எடுத்து இருந்தனர்.
மழை குறுக்கிட்டு உள்ளதால், ஆட்டம் தொடங்க தாமதமாகி கொண்டே செல்கிறது. ஆட்டம் டிஎல்எஸ் முறைப்படி ஓவர்கள் குறைக்கப்படுகிறதா.? அல்லது ஆட்டம் ரத்து செய்ய படுகிறதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
நெல்லை : இன்று (டிசம்பர் 20) திருநெல்வேலி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் பட்டப்பகலில் ஒரு கொடூர கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது.…
சென்னை: அமெரிக்காவை சேர்ந்த யூடியூபர் ஜெய் ஸ்ட்ரேஸி (jay streazy) என்பவர், உலகமுழுவதும் உள்ள பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு…
சென்னை : இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் திடீரென தான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது இன்னுமே…
ஹரியானா: இந்திய தேசிய லோக் தளம் கட்சித் தலைவரும், ஹரியாணா முன்னாள் முதல்வருமான ஓம் பிரகாஷ் சௌதாலா(89) மாரடைப்பால் காலமானார்.…
சென்னை: 2025ம் ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஜனவரி 6ம் தேதி தொடங்கும் என்றும், அன்று தமிழக ஆளுநர்…
நெல்லை : இன்று தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஆழ்த்தும் வகையில் அதிர்ச்சியான சம்பவம் திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்துள்ளது. பட்ட பகலில் நெல்லை…