ஆசிய கோப்பை ஒருநாள் தொடரானது இலங்கையில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே, லீக் சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில், தற்போது சூப்பர் 4 போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த சூப்பர் 4 சுற்றுக்கு இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய நாடுகள் தகுதிபெற்று விளையாடி வருகின்றன. இருப்பினும், இலங்கையில் மழை பெய்து வருவதால் போட்டி சரிவர நடைபெற முடியாமல் இருந்து வருகிறது.
அந்தவகையில், நேற்றைய சூப்பர் 4 சுற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி இலங்கையில் உள்ள கொழும்பு மைதானத்தில் தொடங்கியது. ஏற்கனவே இந்த மைதானத்தில் மழை பெய்யு 90% வாய்ப்பு உள்ளது என இலங்கை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்த நிலையிலும், போட்டி தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களான ரோஹித் சர்மா, சுப்மன் கில் ஆகியோர் 56 மற்றும் 58 ரன்கள் அடித்து அவுட் ஆகி இருந்தனர். அதன் பிறகு களமிறங்கிய விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் 8 மற்றும் 17 ரன்களுடன் களத்தில் நின்றனர். 24.1 ஓவர் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்த சமயத்தில் சுமார் 4.30 மணியளவில் மைதானத்தில் மழை பெய்ய தொடங்கியது.
மழை குறுக்கிட்ட காரணத்தால் போட்டியானது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. தொடர் மழை காரணமாக ‘ரிசர்வ் டே’ செய்யப்பட்டு இன்று மீண்டும் போட்டி தொடங்கும் அறிவிக்கப்பட்டது.ஆனால், இன்று மதியம் 3 மணிக்கு போட்டி தொடங்கும் என எதிர்பார்க்கப்ட்ட நிலையில், மழை பெய்ததால் போட்டி தொடங்க தாமதமானது. இந்த நிலையில், இந்தியா, பாகிஸ்தான் போட்டி சரியாக 4.40 மணிக்கு 25 ஓவரில் இருந்து மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. களத்தில் விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் விளையாடி வருகின்றனர்.
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான…
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…