Asia Cup 2023: இந்திய மகளிர் ‘ஏ’ (எமர்ஜிங்) அணியை அறிவித்தது பிசிசிஐ!
ஏசிசி எமர்ஜிங் மகளிர் ஆசிய கோப்பை 2023க்கான இந்திய மகளிர் ‘ஏ’ (எமர்ஜிங்) அணி அறிவிப்பு.
ஜூன் 12-ஆம் தேதி ஹாங்காங்கில் தொடங்கும் ஏசிசி எமர்ஜிங் மகளிர் ஆசியக் கோப்பையில் பேட்டிங் ஆல்-ரவுண்டர் ஸ்வேதா செஹ்ராவத் தலைமையில் 14 பேர் கொண்ட இந்திய ‘ஏ’ மகளிர் அணியை அறிவித்துள்ளது பிசிசிஐ. இந்தியா ‘ஏ’ மகளிர் அணி ஜூன் 13-ம் தேதி டின் குவாங் மைதானத்தில் போட்டியை நடத்தும் ஹாங்காங்கிற்கு எதிராக தனது முதல் போட்டியில் விளையாடுகிறது.
ஏசிசி வளர்ந்து வரும் (எமர்ஜிங்) மகளிர் ஆசியக் கோப்பைக்கான இந்திய ‘ஏ’ (எமர்ஜிங்) அணியை அகில இந்திய மகளிர் தேர்வுக் குழு என்று பிசிசிஐ ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஏசிசி வளர்ந்து வரும் மகளிர் ஆசியக் கோப்பையில் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்ட எட்டு அணிகள் பங்கேற்றுள்ளனர்.
இந்தியா ‘ஏ’ (எமர்ஜிங்) மகளிர் அணி, குரூப் A-இல் இடம்பெற்றுள்ளது. இதில் புரவலன் ஹாங்காங், தாய்லாந்து ‘A’ மற்றும் பாகிஸ்தான் ‘A’ ஆகியவையும் உள்ளன. அதே நேரத்தில் வங்காளதேசம் ‘A’, இலங்கை ‘A’, மலேசியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவை குரூப் b-ல் உள்ளன. தொடருக்கான இறுதிப் போட்டி ஜூன் 21ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
India ‘A’ (Emerging) Squad: ஸ்வேதா செஹ்ராவத் (கேப்டன்), சௌம்யா திவாரி (துணை கேப்டன்), த்ரிஷா கோங்காடி, முஸ்கன் மாலிக், ஸ்ரேயங்கா பாட்டீல், கனிகா அஹுஜா, உமா செத்ரி (விக்கெட் கீப்பர்), மம்தா மடிவாலா (விக்கெட் கீப்பர்), டிடாஸ் சாது, யஷஸ்ரீ சோப்ரா, பர்ஷேவி, பர்சேவி மன்னத் காஷ்யப், பி அனுஷா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
???? NEWS ????: BCCI announces India ‘A’ (Emerging) squad for ACC Emerging Women’s Asia Cup 2023. #WomensEmergingTeamsAsiaCup #ACC
More Details ????https://t.co/Xffh1IW5JJ
— BCCI Women (@BCCIWomen) June 2, 2023