ஆசிய கோப்பை 2022 : டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான்.. பேட்டிங்கிற்கு தயாரான இந்தியா.! ரோஹித்திற்கு ஓய்வு.!
ஆசிய கோப்பை தொடரில் இந்திய – ஆப்கானிஸ்தான் அணி இடையிலான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
இறுதி போட்டி வாய்ப்பை கிட்டதட்ட இழந்துவிட்ட நிலையில் இன்று ஆசிய கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தானுடன் மோதுகிறது இந்திய கிரிக்கெட் அணி. இந்த போட்டி இன்னும் சில மணி துளிகளில் (இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு) தொடங்க உள்ளது.
இதில் ஆப்கானிஸ்தான் அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்து இந்தியாவை பேட்டிங் செய்ய அழைத்துள்ளது. இதில் இந்திய கேப்டன் ரோஹித்திற்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக கே.எல்.ராகுல் இன்று கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணியில், கேஎல் ராகுல்(கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த்(விக்கெட் கீப்பர்), தீபக் ஹூடா, தினேஷ் கார்த்திக், அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் களமிறங்குகின்றனர்.
அதே போல, ஆப்கானிஸ்தான் அணி சார்பாக, ஹஸ்ரத்துல்லாஹ் ஜசாய், ரஹ்மானுல்லா குர்பாஸ்(விக்கெட் கீப்பர்), இப்ராஹிம் சத்ரான், நஜிபுல்லா சத்ரான், முகமது நபி(கேப்டன்), கரீம் ஜனாத், ரஷீத் கான், அஸ்மத்துல்லா உமர்சாய், முஜீப் உர் ரஹ்மான், ஃபரீத் அஹ்மத் மாலிக், ஃபசல்ஹாக் ஃபாரூக்கி ஆகியோர் களமிறங்குகின்றனர்.