ஆசிய கோப்பை 2018:இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 3 விக்கெட்டுகளை இழந்து திணறி வரும் பாகிஸ்தான் அணி ..!

Default Image

இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் அணி 16 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.

ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. 6 நாடுகள் பங்கேற்ற இந்த தொடரில் லீக் சுற்று முடிந்து ‘சூப்பர் 4’ சுற்று நடைபெற்று வருகிறது. இதில், துபாயில் இன்று நடைபெறும் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றது.

இந்நிலையில் இந்தியாவுடனான போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் சர்ப்ராஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதன் பின்னர் பேட்டிங்கை தொடங்கிய பாகிஸ்தான் அணி 16 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 58 ரன்கள் அடித்துள்ளது. இந்திய அணியின் பந்துவீச்சில் சாகல் மற்றும் குல்தீப் 1 விக்கெட் வீழ்த்தியுள்ளனர்.மேலும் சாகல் ஒரு ரன்-அவுட்டும் செய்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்