ASIA CUP 2018:நான் சொல்றேன் இந்திய அணி ஆசிய கோப்பை போட்டிகளில் விளையாட வேண்டாம் ..!சேவாக் இந்திய அணிக்கு கட்டளை

Default Image

இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் ஆசிய கோப்பை போட்டிகளில் விளையாட  கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

துபாயில் வருகின்ற செப்டம்பர் மாதம் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது.இந்தப் போட்டிகள் செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்குகிறது.இந்த போட்டியில் ஆசிய உள்ள அணிகளான இந்தியா, பாகிஸ்தான்,வங்கதேசம், ஆப்கானிஸ்தான், இலங்கை ஆகிய அணிகள் விளையாடுகின்றது.மேலும் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளது.மேலும் தகுதிச் சுற்றில் வெற்றிபெரும் அணியும் ஏ பிரிவில் இடம் பெரும்.

இந்த போட்டியில் 19ஆம் தேதி இந்திய அணி தனது நிரந்தர எதிரியான பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கின்றது.ஆனால் இதற்கு முந்தைய நாளான 18 ஆம் தேதியும் இந்திய அணிக்கு ஒரு போட்டி உள்ளது.தொடர்ச்சியாக இரண்டு போட்டிகள் உள்ளதால் பிசிசிஐ ஏற்கனேவே  கடும் அதிருப்தியை வெளிபடுத்தி இருப்பதாக தகவல் வெளியானது.மேலும் பாகிஸ்தான் அணிக்கு இரண்டு நாட்கள் இடைவெளியுடனே இந்தியாவுடனான ஆட்டம் உள்ளது.

Image result for sehwag india asia cup

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் இதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் கூறுகையில்,ஆசிய கோப்பை போட்டிகளின் அட்டவனையை பார்த்தவுடன் நான் அதிர்ச்சிக்கு ஆளாகி விட்டேன்.கடும் வெப்பத்தில் துபாயில் ஓய்வில்லாமல் விளையாடுவது மிகவும் கடினமான ஓன்று.இதனால் இந்திய அணி ஆசிய கோப்பை போட்டிகளில் நிச்சயம் விளையாட வேண்டாம் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்