அஸ்வின் சாதனை: முதல் பந்தில் விக்கெட்., 2வது இன்னிங்சில் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அபாரம்.!
டெஸ்ட் போட்டியின் ஒரு இன்னிங்சின் முதல் பந்தில் விக்கெட் வீழ்த்திய, முதல் சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்தார் ரவிச்சந்திர அஸ்வின்.
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டி கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வருகிறது. 4வது நாளான இன்று 2வது இன்னிங்சில் விளையாடிய இங்கிலாந்து அணி 178 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, 419 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. இதில் கடந்த 114 ஆண்டுகளில் டெஸ்ட் போட்டியின் ஒரு இன்னிங்சின் முதல் பந்தில் விக்கெட் வீழ்த்திய, முதல் சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்தார் ரவிச்சந்திரன் அஸ்வின்.
இரண்டாவது இன்னிங்சில் முதல் பந்தில் இங்கிலாந்து வீரர் பர்னஸ் விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்தார். மேலும், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்சில் சிறப்பாக பந்துவீசி 6 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். முதல் டெஸ்ட் போட்டியை பொறுத்தளவில் அஸ்வின் 9 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 419 ரன்கள் இலக்குடன் 2வது இன்னிங்சில் களமிறங்கிய இந்திய அணி நான்காவது நாள் ஆட்டம் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 39 ரன்கள் எடுத்து சுப்மான் கில் மற்றும் புஜாரா களத்தில் உள்ளனர்.