அஸ்வின் நிகழ்த்திய அடுத்த சாதனை ! ஐபிஎல்லில் ஆதிக்கம் செலுத்தும் தமிழர்கள் !!

சென்னை : ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சுழற் பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் நடைபெற்ற நேற்றைய சென்னை அணியுடனான போட்டியில் புதிய சாதனையை படைத்துள்ளார்.
நடைபெற்று வருகிற இந்த ஐபிஎல் தொடரானாது முடிவடையும் கட்டத்தை நெருங்கி உள்ளது. இந்த தருணத்தில் நேற்றைய லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியை சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நம்பிக்கை சுழற் பந்து வீச்சாளரான தமிழக வீரர் அஸ்வின் சிறப்பாக பந்து வீசி புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தி உள்ளார்.
அஸ்வின் சர்வேதச கிரிக்கெட் போட்டிகளில் பல சாதனைகளை நிகழ்த்தி இருக்கிறார் என்பது நமக்கு தெரிந்ததே. அதே போல இவர் ஐபிஎல் தொடரிலும் இவர் பல சாதனைகளை நிகழ்த்தி இருக்கிறார். அதில் நேற்றைய சென்னை அணியுடனான போட்டியில் இவர் புதிய சாதனையை நிகழ்த்தி இருந்தார். அது என்னவென்றால் சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் 50 விக்கெட்டுகளை எடுத்த முதல் வீரராக அஸ்வின் இடம்பிடித்துள்ளார்.
அஸ்வின் ஐபிஎல் தொடரின் ஆரம்ப கட்டத்தில் சிஎஸ்கே அணிக்காக விளையாடினார். அதன் பிறகு 2016 மற்றும் 2017ம் ஆண்டில் தோனி விளையாடிய ரைசிங் பூனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்காக விளையாடினார். அதனை தொடர்ந்து 2018 ம் ஆண்டில் அஸ்வின் பஞ்சாப் அணிக்காக விளையாடி 2020-ம் ஆண்டிலிருந்து தற்போது வரை ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வருகிறார்.
நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சென்னை அணியுடனான போட்டியில் அஸ்வின் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இந்த 2 விக்கெட்டுகள் மூலம் இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளார். இவருக்கு அடுத்த படியாக சென்னை அணியின் முன்னாள் வீரரான டுவையின் பிராவோ சேப்பாக்கம் மைதானத்தில் 44 விக்கெட் எடுத்து 2-வது இடத்தில் உள்ளார். இதே போல சாய் சுதர்சன், தினேஷ் கார்த்திக், நடராஜன், ஷாருக் கான் என பல தமிழக வீரர்கள் இந்த ஐபிஎல் தொடரில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
AUSvENG : முடிஞ்சா தொட்டுப்பார்.! வெளுத்து வாங்கிய பென் டக்கெட்! ஆஸி.க்கு இமாலய இலக்கு!
February 22, 2025
காமராஜர் ஆட்சி : காங்கிரஸ் கட்சிக்குள் மோதல்? செல்வப்பெருந்தகை vs மாணிக்கம் தாகூர்!
February 22, 2025
AUS v ENG : முக்கிய வீரர்கள் இல்லாமல் வெற்றிபெறுமா ஆஸி…இங்கிலாந்துக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!
February 22, 2025
அந்த ரூ.2500 எங்க? கேள்வி கேட்ட ஆம் ஆத்மி! உடனடியாக நிறைவேற்றிய பாஜக!
February 22, 2025