அஸ்வின் மூளையை காப்பியடிக்க முடியாது; ஆஸ்திரேலியாவை ட்ரோல் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ்.!
அஷ்வினின் செயலை நீங்கள் காப்பி செய்யலாம் மூளையை அல்ல என ஆஸ்திரேலியாவை, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ட்ரோல் செய்துள்ளது.
இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் 2-வது டெஸ்ட் நேற்று டெல்லியில் தொடங்கியது. இதில் டாஸ் வென்று ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது. இதில் முதல் விக்கெட்டுக்கு வார்னர்-க்வாஜா ஜோடி 50 ரன்கள் எடுத்த போது வார்னர் 15 ரன்களில் ஷமி பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
அதன்பின் களமிறங்கிய லபுஸ்சன் 18 ரன்களில் விளையாடிக்கொண்டிருக்கும் போது, அஷ்வின் ஓவரில் ஆட்டமிழந்தார், அவரையடுத்து இறங்கிய ஸ்மித்தும் அதே ஓவரில் அஸ்வின் பந்தில் அவுட் ஆனார். இதன்மூலம் அஷ்வின் ஒரே ஓவரில் நம்பர்-1 மற்றும் 2 கிரிக்கெட் வீரர்களை ஆட்டமிழக்கச் செய்தார். இதனையடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ஆஸ்திரேலிய அணி மேற்கொண்ட பயிற்சி குறித்து ட்ரோல் செய்துள்ளது.
ஆஸ்திரேலிய அணி, இந்தியா வரும் முன் அஷ்வினை எதிர்கொள்ள அவரைப் போல் பவுலிங் செய்யும் வீரருடன் பயிற்சி மேற்கொண்டது, இதனை சுட்டிக்காட்டி ராஜஸ்தான் அணி தனது ட்விட்டரில், அஷ்வினின் செயலை நீங்கள் காப்பி செய்யலாம் மூளையை செய்ய முடியாது என்று பதிவிட்டுள்ளது.
“???????????? ???????????? ???????????????????? ???????? ????????????????????????, ???????????? ???????? ????????????????????” pic.twitter.com/ZR6FCr8OJD
— Rajasthan Royals (@rajasthanroyals) February 17, 2023