‘எனக்கு மாரடைப்பு வந்திருக்கும்’.. சச்சின், கபில் தேவ் குறித்து அஸ்வின் எக்ஸ் பதிவு!
இப்படி இருக்கும் என்றும் யாராவது என்னிடம் சொன்னால், எனக்கு அப்போதே மாரடைப்பு வந்திருக்கும் என்று அஸ்வின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக அறிவித்தது இன்னுமே ரசிகர்களுக்கும் சில கிரிக்கெட் வீரர்களுக்கும் அதிர்ச்சியான அறிவிப்பாகத்தான் இருக்கிறது.
38 வயதில் அஸ்வின் ஓய்வு குறித்து பலரும் அதிர்ச்சியை வெளிப்படுத்தி வரும் நிலையில், இந்திய அணியில் அவரின் இடத்தை நிரப்ப போவது யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்த நிலையில், கிரிக்கெட் ஜாம்பவான்களான சச்சின் டெண்டுல்கர் மற்றும் கபில் தேவ் ஆகியோர் நேரடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டதாக வாழ்த்திய பதிவின் ஸ்கிரீன் ஷாட்டை சமுக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் அஸ்வின், “25 ஆண்டுகளுக்கு முன்பு என்னிடம் ஸ்மார்ட் போன் வைத்திருப்பேன் என்றும், இந்திய கிரிக்கெட் வீரராக எனது கேரியரின் கடைசி நாள் (சச்சின், கபில் வாழ்த்து) அழைப்பு பதிவு இப்படி இருக்கும் என்றும் யாராவது என்னிடம் சொன்னால், எனக்கு அப்போதே மாரடைப்பு வந்திருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
If some one told me 25 years ago that I would have a smart phone with me and the call log on the last day of my career as an Indian cricketer would look like this☺️☺️, I would have had a heart attack then only. Thanks @sachin_rt and @therealkapildev paaji🙏🙏 #blessed pic.twitter.com/RkgMUWzhtt
— Ashwin 🇮🇳 (@ashwinravi99) December 20, 2024