இம்முறை மன்கடிங் இன்றி மண்ணைக் கவ்விய பட்டு-சுருட்டிய சுழல்.!!

Published by
kavitha

ஐபிஎல் போட்டியில் மன்கடிங் செய்யாமலே ராஜஸ்தான் வீரர்  ஜோஸ் பட்லரை   அஸ்வின் தனது சுழலால் வீழ்த்தி  அசத்தியுள்ளார்.

ஐபிஎல் போட்டியில் மன்கடிங் செய்யாமலே ராஜஸ்தான் வீரர்  ஜோஸ் பட்லரை  மீண்டும் வீழ்த்தி அசத்தி காட்டினார் டெல்லி அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின்.

கடந்த சீசனில் பஞ்சாப் அணியின் கேப்டனாக வலம்வந்தவர். அந்த சமயத்தில் ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டம் ஒன்றில்அந்த அணி வீரர் ஜோஸ் பட்லரை  மன்கடிங் முறையில் ஆட்டமிழக்க செய்தார்.

இது ஐசிசி விதிகளை மீறி பேட்ஸ்மேன்கள் பந்து வீசுவதற்கு முன்பே  கிரீசை விட்டு ஓடத் தயாராகுவதை தடுக்க ஏற்படுத்தப்பட்ட விதியாகும்.இதைப்பயன்படுத்தி ஆட்டமிழக்க செய்யலாம் . இதன்படியே அஸ்வின் அவுட் ஆக்கினார்.ஆனாலும் அவுட்க்கு எதிராகவும், ஆதரவாகவும் விமர்சனங்கள்  எழுந்தது.தவறு செய்யும் பந்து வீச்சாளர்களுக்கு வைடு, நோ பால் என தண்டனை தருவது போல், ஆடாத முனையில் இருந்து அவசரப்பட்டு கிரீசை விட்டு  வெளியேறும் பேட்ஸ்மேன்களுக்கு தண்டனை இல்லையா?? என்பதில் உறுதியாக அஷ்வின் இருந்தார்.

இந்நிலையில் அக்.5ம் தேதி  பெங்களூருக்கு எதிரான போட்டியில், அவ்வணி வீரர் ஆரோன் பிஞ்ச்சை,  மன்கடிங் முறையில் அவுட் செய்ய வாய்ப்பு கிடைத்தது ஆனால் அவ்வாறு அஷ்வின் செய்யவில்லை. ஆனால் ‘அடுத்த முறை இப்படி வாய்ப்பை நழுவ விட்டுக்கொண்டு இருக்க மாட்டேன்.முதலும் கடைசி இதுவே என்று எச்சரிக்கை மட்டும் செய்தாதக  ட்வீட் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லி – ராஜஸ்தான் அணிகள் இடையே நடைபெற்ற போட்டியில்  2வது இன்னிங்சில் 3வது ஓவரை  அஷ்வின் வீச அனுபவ வீரர் ஜோஸ் பட்லர் எதிர்கொள்ள இதனால் மீண்டும் மன்கடிங் நடக்குமா?? என்று எல்லோருக்கும் ஆர்வத்தோடு காத்திருக்க அவ்ஓவரின் முதல்  பந்தை எதிர்கொண்ட பட்லர் ஒரு ரன் எடுத்தார். அதனால் 2வது பந்துக்கு அவர் எதிர்புறத்தில் நின்றார். ஆனால் கிரீசை விட்டு வெளியே  இம்முறை போகவில்லை. தொடர்ந்து 2வது பந்தில் ஜெய்ஸ்வால் ஒரு ரன் ஓடினார். மீண்டும் பட்லர் 3வது பந்தை எதிர்கொண்டார். அந்த பந்தை அவர்  லாங்  ஆன், மிட் விக்கெட்களுக்கு இடையில் தூக்கியடிக்க முயன்றார். ஆனால் பேட்டின் முனையில் பட்ட பந்து ஸ்கொயர் லெக்கில் தாவி அருகே நின்றிருந்த தவான் கையில் சென்று படுத்துக்கொண்டது.இம்முறை மன்கடிங் செய்யாமலே  பட்லர் 13ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

Ashwin vs Buttler: Shikhar Dhawan grabs excellent catch as Ashwin dismisses Buttler in DC vs RR IPL 2020 match | The SportsRush

இந்த போட்டியில்46 ரன்  வித்தியாசத்தில் டெல்லி வெற்றிப்பெற்றது. 4 ஓவரில்  22  ரன் விட்டுக் கொடுத்து 2 விக்கெட் வீழ்த்திய அஷ்வின் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். போட்டிக்கு பிறகு அஷ்வின் பேசுகையில் ‘நான் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் நலமாக இருக்கிறேன் என்பதை பார்க்கிறீர்கள்  பவர் பிளேயின் போது ஓரிரு  முறை ‘கேரம் பால்’ வீசினேன்.  அப்படி எத்தனை முறை வீச வேண்டும் என்பது களத்தைப் பொறுத்தது. எனக்கு ஒரு அற்புதமான கேட்ச்  கிடைத்தது. ஜோஸ் பட்லர் விக்கெட்டை கைப்பற்றுவது முக்கியமானது. பவர் பிளேவுக்கு பிறகு பனியால் பந்து ஈரமாக விட்டது என்று கூறினார்.

 
Published by
kavitha

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

7 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

9 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

9 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

9 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

9 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

10 hours ago