அஸ்வின் சிறந்த பவுலர்; அவரிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது-நேத்தன் லயன்
அஷ்வினிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது என்று நேத்தன் லயன் கூறியுள்ளார்.
இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடர் நடைபெற்று வரும் நிலையில் ஆஸ்திரேலிய வீரர் நேத்தன் லயன், இந்திய சுழற்பந்து வீரர் அஷ்வினை புகழ்ந்து பேசியுள்ளார். நாக்பூரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 1-0 என முன்னிலை வகிக்கிறது.
முதல் போட்டியில் அஸ்வின் மற்றும் ஜடேஜாவின் சுழலில் ஆஸ்திரேலிய அணி வீழ்ந்தது. அஸ்வின் இரண்டாவது இன்னங்சில் 5 விக்கெட்கள் உட்பட முதல் போட்டியில் மொத்தம் 8 விக்கெட்களை எடுத்தார். அஸ்வின் குறித்து பேசிய ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நேத்தன் லயன், அவரிடம் நிறைய ஸ்கில்(திறன்) இருக்கிறது. நவீன காலத்தில் சிறந்த பவுலராக அஸ்வின் கருதப்படுகிறார்.
நான் இந்தியா வருவதற்கு முன் அஸ்வினின் பவுலிங் வீடியோ நிறைய பார்த்தேன், என் வீட்டில் மடிக்கணினி முன் அமர்ந்து என் மனைவியை பைத்தியம் பிடிக்கும் அளவுக்கு செய்துள்ளேன். ஏனென்றால் இது கற்றுக்கொள்வது பற்றியது, இன்னும் கற்றுக்கொண்டிருக்கிறேன். அஷ்வின் சாதனைகள் மகத்தானது.
அஸ்வினிடம் சில திறன்கள் உள்ளன, மேலும் அவர் சிறப்பாக செயல்பட கற்றுக்கொள்ள விரும்புகிறார் என்று லயன் கூறினார். இந்த விளையாட்டின் சிறந்த விஷயம் என்னவென்றால், நாங்கள் தொடர்ந்து கற்றுக்கொள்கிறோம். அதுவும் எதிரணியைப்பார்த்து கற்றுக்கொள்கிறோம் என்று அவர் மேலும் தெரிவித்தார். டெல்லியில் நாளை தொடங்கும் 2-வது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக பேசிய லயன், அஷ்வினிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டதாகவும் இன்னும் கற்றுக்கொள்ள இருக்கிறது என்று கூறியுள்ளார்.
அஸ்வின் எனக்கு நிறைய கற்றுக் கொடுத்துள்ளார், இந்தியாவில் மட்டுமல்ல ஆஸ்திரேலியாவிலும் அவர் எனக்கு கற்றுக்கொடுத்தது நிறைய இருக்கிறது. அவரிடமிருக்கும் சில திறன்களை நான் வளர்க்க விரும்புகிறேன், அப்போதுதான் என்னால் இன்னும் நன்றாக செயல்படமுடியும் என லயன் மேலும் கூறினார்.