சாம்பியன்ஸ் ட்ராஃபியில் அஸ்வின்? கைகொடுப்பாரா கவுதம் கம்பீர்?

Published by
அகில் R

சென்னை : இந்திய அணியின் மூத்த சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் தற்போது தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் திண்டுக்கல் அணிக்காக விளையாடி வந்தார். மேலும், அந்த அணியின் கேப்டனாகவும் விளையாடி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாகவும் இருந்தார்.

அதே நேரம் மறுபக்கம் இந்திய அணி இலங்கை அணியுடன் சுற்று பயணத்தொடர் மேற்கொண்டு வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை இந்திய அணி 3-0 எனக் கைப்பற்றி இருந்த நிலையில், அடுத்ததாக விளையாடிய 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரிலும் முதல் போட்டியில் டிராவும், 2-வது போட்டியில் தோல்வியும் சந்தித்தது.

என்னதான் அணியில் குல்தீப் யாதவ் போன்ற சுழல் பந்து வீச்சாளர் இருந்தாலும், அஸ்வின் போன்ற ஒரு அனுபவசாலி வீரர் தேவை என ரசிகர்கள் இந்தியா அணியின் இந்த தோல்விக்குப் பிறகு கூற தொடங்கினார்கள். இதற்கு முன்னரும் இதே போல் அவரது திறமையை நிரூபித்ததால் கடந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற டி20  உலகக்கோப்பை தொடரில் கலந்து கொண்டு விளையாடினார்.

அதில் 6 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அதற்கு அடுத்த வருடமே 2023-ம் ஆண்டின் 50 ஓவர் உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணியில் இடம் பெற்றிருந்தார். அதிலும், ஆஸ்திரேலிய அணியுடனான போட்டியில் மட்டுமே அஸ்வின் விளையாடி இருந்தார். அதன் பின் அந்த தொடரில் எந்த ஒரு போட்டியிலும் அவர் விளையாடவில்லை.

தற்போது நடந்து முடிந்த டிஎன்பிஎல் தொடரிலும் பந்து வீச்சில் 9 விக்கெட்டுகளும், பேட்டிங்கில் 3 அரை சதங்களுடன்  252 ரன்களும் எடுத்து தன்னை ஒரு சிறந்த ஆல்ரவுண்டர் என நிரூபித்திருக்கிறார் என்றே கூறலாம்.

இதனைக் கருத்தில் கொண்டு அடுத்த வருடம் நடைபெற இருக்கும் 50 ஓவர் சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் அஸ்வினுக்கு ஒருநாள் தொடர்களில் ஒரு வாய்ப்பளித்துப் பார்க்கலாம் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

மேலும், இந்திய அணியின் தற்போதைய பயிற்சியாளராக இருக்கும் கவுதம் கம்பீர் அடுத்த கட்டமாக டெஸ்ட் போட்டிகள் மட்டுமின்றி அஸ்வினுக்கு ஒருநாள் போட்டிகளிலும் வாய்ப்பளிக்க வேண்டும் என இந்திய ரசிகர்கள் இணையத்தில் கூறி வருகின்றனர்.

இதனை எல்லாம் கடந்து பல ஆல்ரவுண்டர் வீரர்கள் அணியில் இருக்கும் பட்சத்தில் அஸ்வினுக்கு சாம்பியன்ஸ் ட்ராபியில் வாய்ப்பு கிடைக்குமா? அதற்குக் கம்பீர் கை கொடுப்பாரா? கிடைத்த வாய்ப்பை அஸ்வின் பயன்படுத்துவாரா? என்பதைப் பொறுத்து இருந்து பார்க்க வேண்டும்.

Published by
அகில் R

Recent Posts

நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல்… ரசிகர்களுக்கு வேண்டுகோள்!

தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை  ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…

8 hours ago

தவறான செய்தி கொண்ட வீடியோக்களுக்கு முற்றுப்புள்ளி… கிரியேட்டர்களுக்கு செக் வைத்த யூடியூப்.!

டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…

8 hours ago

தனியா வந்தாலும் சரி, மொத்தமா வந்தாலும் சரி… “2026ல் திமுக கூட்டணிக்குதான் வெற்றி” – மு.க.ஸ்டாலின்!

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…

10 hours ago

தை அமாவாசை 2025 இல் எப்போது?.

தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…

10 hours ago

பாப்கார்ன்களுக்கு 18% ஜி.எஸ்.டி ஏன்? நிர்மலா சீதாராமன் கொடுத்த விளக்கம்!

ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று  நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…

13 hours ago

நிதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு – டிஜிபி உத்தரவு!

சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…

13 hours ago