தோல்விக்கு காரணம் இதுதான்: புலம்பும் பஞ்சாப் கேப்டன் அஸ்வின்
- பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையிலான போட்டியில் பஞ்சாப் அணி கொல்கத்தாவில் 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்த தோல்விக்கு பின்னர் பஞ்சாப் கேப்டன் அஸ்வின் காரணம் கூறினார் இது குறித்து அவர் கூறியதாவது…
சின்னச்சின்ன நுணுக்கங்களில் நாங்கள் கவனம் செலுத்த வேண்டும். அவை இந்த போட்டியை பெரிதாக பாதித்துவிட்டது. இந்த தோல்விக்கு காரணம் நான்தான். வட்டத்திற்குள் 4 வீரர்கள் இருப்பதை நான் பார்த்திருக்க வேண்டும் . அந்த ஒரு நோபால் ஆட்டத்தை மாற்றிவிட்டது. இதை நான் சரியாக பார்த்திருக்க வேண்டும். அதுதான் தோல்விக்கு காரணம் என்று புலம்பும் வகையில் பேசினார் அஸ்வின்.
ரஸலுக்கு வீசிய அந்த குறிப்பிட்ட நோபால் பற்றி பேசினார் ரவிச்சந்திரன் அஸ்வின் மேலும் அந்த நோபால் தான் தோல்விக்கு காரணம் எனவும் கூறினார்.