பும்ரா ஏலத்திற்கு வந்திருந்தால் ரூ.520 கோடி கூட பத்தாது! ஆஷிஷ் நெஹ்ரா புகழாரம்!
பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் ஜஸ்பிரித் பும்ரா தலைமையிலான இந்திய அணி முதல் போட்டியில் வெற்றிபெற்ற நிலையில், ஆஷிஷ் நெஹ்ரா பும்ராவை பாராட்டி பேசியுள்ளார்.
மும்பை : பார்டர்-கவாஸ்கர் டிராபி டெஸ்டில் ஜஸ்பிரித் பும்ரா தற்போது விளையாடி வருகிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெர்த்தில் இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் மறக்கமுடியாத வெற்றியைப் பெற அவருடைய பந்துவீச்சும் அவருடைய கேப்டன்சியும் பெரிய அளவில் உதவியுள்ளது. 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பும்ரா ஏலத்திற்கு வந்திருந்தால் அதிகமான தொகைக்கு ஏலத்தில் எந்த அணி வேண்டுமானாலும் எடுத்திருக்கும் என பேசியிருக்கிறார். இது குறித்து பேசிய அவர் ” நியூசிலாந்துக்கு எதிரான முந்தைய தொடரில் ஜஸ்பிரித் பும்ரா தான் ஒரு அருமையான கேப்டன் என்பதை காட்டினார்.
அந்த தொடருக்கு பிறகு இப்போது பார்டர்-கவாஸ்கர் ட்ராபி தொடரில் அருமையாக செயல்பட்டு வருகிறார். ரோஹித் சர்மா இல்லாத அணியை அவர் எப்படி வழிநடத்தி செல்லப்போகிறார் என நானே யோசித்துக்கொண்டு இருந்தேன். ஆனால், அவர் இல்லாமலே கூட அணியை ஜஸ்பிரித் பும்ரா அருமையாக கையாண்டு இருக்கிறார். அதற்கு இந்த நேரத்தில் நான் அவருக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்” எனவும் ஆஷிஷ் நெஹ்ரா கூறினார்.
தொடர்ந்து பேசிய ஆஷிஷ் நெஹ்ரா ” இந்த முறை ஐபிஎல் ஏலத்திற்கு ஜஸ்பிரித் பும்ரா வரவில்லை. ஒரு வேலை அவர் இந்த மெகா ஏலத்திற்கு வந்திருந்தார் என்றால் நிச்சயமாக அவர் பெரிய விலைக்கு எந்த அணி வேண்டுமானாலும் எடுத்திருக்கும். அவருடைய ஏலம் விலை. ரூ 520 கோடியாக இருந்தால் கூட அது பத்தாது. அவ்வளவு விலைக்கு அவர் வந்தாலும் கூட அவரை எந்த அணி வேண்டுமானாலும் ஏலத்தில் எடுக்கும்” எனவும் ஆஷிஷ் நெஹ்ரா கூறியுள்ளார்.
மேலும், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளிலும் ஜஸ்பிரித் பும்ரா மும்பை அணிக்காக தான் விளையாடவுள்ளார் . மும்பை அணி 18 கோடி ரூபாய் கொடுத்து அவரை தக்க வைத்துள்ளது. மும்பை அணி அதிகம் சம்பளம் கொடுத்து தக்க வைத்த வீரரும் அவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.