ஐபிஎல் போட்டினா இவங்க மட்டும் தான் கெத்தா?நாங்க கெத்து கிடையாதா?சீரும் பிரபலம் …
பேட்ஸ்மேன்களுக்கான போட்டி என்ற பார்வை டி20 போட்டிகளில் நிலவி இருக்கிறது. 20 ஓவர் போட்டிகளில் வெறும் 120 பந்துகள் மட்டுமே வீசப்படும் என்பதால், பேட்ஸ்மேன்கள் அடித்து ஆடுவதால், அது பேட்ஸ்மேன்களின் போட்டியாக பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் போட்டிகள் சொல்லவே தேவையில்லை. பேட்ஸ்மேன்களுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இந்த ஐபிஎல் தொடருக்குக்கூட, மிட்செல் ஸ்டார்க்கை தவிர வேறு எந்த பவுலரும் அதிகமான விலைக்கு ஏலம் போகவில்லை. பேட்ஸ்மேன்களுக்குத்தான் கோடி கோடியாக கொட்டி கொடுக்கப்படுகிறது.
இந்நிலையில், இதுதொடர்பாக பேசியுள்ள முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும் தற்போதைய பெங்களூரு அணியின் பயிற்சியாளருமான ஆஷிஸ் நெஹ்ரா, டி20 போட்டி பேட்ஸ்மேன்களுக்கான போட்டி என்று சொல்லிவிட முடியாது. பந்துவீச்சாளர்களுக்குமானதுதான்.
ஐந்து போட்டிகளில் சரியாக விளையாடாத பேட்ஸ்மேன், ஆறாவது இன்னிங்ஸில் 40 பந்துகளில் 120 ரன்களோ, 50 பந்தில் 130 ரன்களோ குவித்துவிட்டால் அது பெரிதாக பேசப்படுகிறது. அதேபோல பந்துவீச்சாளர் 4 ஓவரில் 25 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் எடுத்தால் அது கவனிக்கப்படாமல் போய்விடுகிறது. 4 ஒவர்களில் 60 விட்டுக்கொடுத்தால், அது பெரிய விஷயமாகிவிடுகிறது.
அனைத்துப் போட்டியிலும் பந்துவீச்சாளர்களில் பங்கும் சமமாக இருக்கிறது. டெஸ்ட் போட்டியில் ஆயிரம் ரன்கள் குவித்தாலும் வெற்றி பெற முடியாது. 20 விக்கெட்டுகளை வீழ்த்தினால்தான் மட்டுமே வெற்றி முடியும். எனவே எந்தவகை கிரிக்கெட்டானாலும் பவுலர்களின் பங்களிப்பு அளப்பரியது.
பயிற்சியாளர் பதவியில் இருந்து கொண்டு வீரர்களை என்ன மாதிரியாக மாற்றப் போகிறீர்கள் என்று கேட்கிறார்கள். வீரர்களின் மனநிலையைதான் மாற்ற வேண்டும் என்று நினைக்கிறேன். பந்துவீச்சாளர்களுக்கு எப்படி பந்துவீச வேண்டும் என்று தெரியும். அதனால், எப்போது என்ன மாதிரியான பந்துகளை வீச வேண்டும் என கற்றுக்கொடுக்க இருக்கிறேன் என நெஹ்ரா தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.