#Ashes2023: ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்!
இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது.
இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இந்தாண்டுக்கான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்தில் நடைபெற்று ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி ஜூன் 16-ம் தேதி தொடங்கியது. அதன்படி, பர்மிங்ஹாமில் நடைபெற்ற முதல் போட்டியில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.
இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில், இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2வது போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.
பர்மிங்ஹாமில் நடைபெற்ற முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்ற நிலையில், தொடரை சமன் செய்ய இங்கிலாந்து அணி முனைப்பு காட்டி வருகிறது. இப்போட்டிக்கான ஆடும் 11 வீரர்களை இங்கிலாந்து அணி நேற்றே அறிவித்திருந்தது. இங்கிலாந்து அணியில் காயமடைந்த மொயின் அலிக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் டங் சேர்க்கப்பட்டுள்ளார். சுழற்பந்துவீச்சாளர்கள் இல்லாமல் இங்கிலாந்து 4 வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்குகிறது.
இங்கிலாந்து XI: பென் டக்கெட், சாக் கிராலி, ஒல்லி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ் *, ஜொனாதன் பேர்ஸ்டோ +, ஸ்டூவர்ட் பிராட், ஒல்லி ராபின்சன், ஜோஷ் டங், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
???? We can confirm our team for the second Ashes Test match at Lord’s.
Congratulations, Josh Tongue ???? #EnglandCricket | #Ashes
— England Cricket (@englandcricket) June 27, 2023