ஆஷஸ் டெஸ்ட் : மூன்றாவது முறையாக 150 ரன்னை தவற விட்ட ஸ்டீவன் ஸ்மித்
இங்கிலாந்து அணி ,ஆஸ்திரேலிய அணி இடையே ஆஷஸ் டெஸ்ட் போட்டிகள் நடந்து வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி பர்மிங்காம் மைதானத்தில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 284 ரன்கள் எடுத்தது. முதல் இன்னிங்சில் அதிகபட்சமாக ஸ்டீவன் ஸ்மித் 144 ரன்கள் குவித்தார்.
பின்னர் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 374 ரன்கள் குவித்தது.இதில் ரோரி பர்ன்ஸ் 133 ரன்கள் அடித்தார்.இந்நிலையில் நேற்று தனது இரண்டாவது இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் , கேமரூன் பான்கிராப்ட் இருவரும் களமிங்கிய வேகத்தில் சொற்ப ரன்னில் வெளியேறினார்.
பிறகு இறங்கிய உஸ்மான் கவாஜா , ஸ்டீவன் ஸ்மித் நிதானமாகவும் , சிறப்பாகவும் விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். அதிரடியாக விளையாடி வந்த உஸ்மான் கவாஜா 40 ரன்னில் வெளியேற பிறகு நின்ற ஸ்டீவன் ஸ்மித் நிதானமாகவும் , அதிரடியாகவும் விளையாடி 207 பந்தில் 142 ரன்கள் குவித்தார்.அதில் 14 பவுண்டரி அடங்கும்.
இந்நிலையில் ஸ்டீவன் ஸ்மித் ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் மூன்று முறை 140 ரன்னில் அவுட் ஆகி உள்ளார்.அதில் இந்த வருட ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் இரண்டு முறை என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்டீவன் ஸ்மித் போல ரிக்கி பாண்டிங்கும் ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் இரண்டு முறை 140 ரன்னில் அவுட் ஆகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.