ஆஷஸ் டெஸ்ட் : முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி முன்னிலை !
இங்கிலாந்து-ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் பர்மிங்காம் மைதானத்தில் நடந்து வருகிறது.டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டையும் இழந்தது 284 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஸ்டீவன் ஸ்மித் 144ரன்கள் குவித்தார்.
பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி இரண்டாம் நாள் போட்டி முடிவில் 4 விக்கெட் இழந்து 267 ரன்கள் அடித்து இருந்தனர். ஆட்டமிழக்காமல் ரோரி பர்ன்ஸ் 125 ரன்களுடனும் , பென் ஸ்டோக்ஸ் 38 ரன்களுடனும் களத்தில் நின்றனர்.
இந்நிலையில் நேற்று 3ம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இங்கிலாந்து அணி ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே பென் ஸ்டோக்ஸ் 50 , ரோரி பர்ன்ஸ் 133 ரன்களுடன் வெளியேறினார்.
பின்னர் இறங்கிய மொயீன் அலி ரன்கள் எடுக்காமல் வெளியேற பிறகு இறங்கிய ஸ்டூவர்ட் பிராட் ,கிறிஸ் வோக்ஸ் இவர்களின் கூட்டணியில் அணியின் எண்ணிக்கை மீண்டும் சற்று உயர்ந்தது.
இறுதியாக இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 374 ரன்கள் குவித்தது. இந்நிலையில் 90 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்சை நேற்று தொடங்கியது. தொடக்க வீரர்கள் கேமரூன் பான்கிராப்ட் 7 , டேவிட் வார்னர் 8 ரன்களில் வெளியேறினர்.
நிதானமாக விளையாடிய உஸ்மான் கவாஜா 40 ரன்கள் குவித்தார். நேற்றைய மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழந்து 124 ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம் ஆஸ்திரேலியா 34 ரன்கள் முன்னிலையில் உள்ளது.