ஆஷஸ் டெஸ்ட் : 2- ம் நாள் போட்டியில் சதம் விளாசிய ரோரி பர்ன்ஸ் !

Default Image

இங்கிலாந்து சென்று ஆஸ்திரேலிய அணி  5 போட்டிகள் கொண்ட ஆஷஸ்  டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் மைதானத்தில் தொடங்கியது.

இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர், கேமரூன் பான்கிராப்ட் இருவரும் களமிறக்கின்றனர். ஆட்டம் தொடக்கத்திலே டேவிட் வார்னர் 2 ரன்னில் வெளியேறினார்.

Image result for The Ashes Test

அதிரடியாக விளையாடிய  ஸ்டீவன் ஸ்மித் 144 ரன்கள் குவித்தார்.டெஸ்ட் போட்டிகளில் தனது 24 சத்தத்தை பூர்த்தி செய்தார். ஆஸ்திரேலியா அணி அனைத்து விக்கெட்டை இழந்து 284 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்ஸ் முடிந்தது. இங்கிலாந்து அணியில் ஸ்டூவர்ட் பிராட் 5 விக்கெட்டையும் , கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டையும் பறித்தனர்.

இதை  தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய  இங்கிலாந்து அணி தொடக்க வீரர்களாக ரோரி பர்ன்ஸ் , ஜேசன் ராய்  இருவரும் களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்தில் நிதானமாக விளையாடி ஜேசன் ராய் 10 ரன்களில் வெளியேற பின்னர் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் இறங்கினர்.

ரோரி பர்ன்ஸ் , ஜோ ரூட் இருவரும் கூட்டணியில் இணைந்து அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். நிதானமாக விளையாடி இருவரும் அரைசதம் கடந்தனர்.சிறப்பாக விளையாடி வந்த ஜோ ரூட் 57 ரன்னில் அவுட் ஆனார்.

Ashes 2019, 1st Test: Rory Burns

பின்னர் இறங்கிய  ஜோ டென்லி 18 , ஜோஸ் பட்லர் 5 ரன்னில் வெளியேறினர்.ஆட்டம் தொடக்கத்தில் இருந்து அதிரடியாகவும் ,நிதானமாகவும் விளையாடி ரோரி பர்ன்ஸ் முதல் சதத்தை நிறைவு செய்தார்.

2- ம் நாள் ஆட்டம் முடிவில் இங்கிலாந்து அணி  267 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டை இழந்து உள்ளது. களத்தில் ரோரி பர்ன்ஸ் 125 ரன்களும் , பென் ஸ்டோக்ஸ் 38 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் விளையாடி வருகின்றனர். இன்று 3- ம் நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live dharmendra pradhan
Minister Palanivel Thiyagarajan - BJP State president Annamalai
DMK MPs iniviting various state CMs
Jio - Starlink
hardik pandya virat kohli and rohit sharma
Malavika Mohanan sad
dharmendra pradhan Anbil Mahesh Poyyamozhi