ஆஷஸ் டெஸ்ட்: வெளுத்து வாங்கிய ஸ்டீவன் ஸ்மித் 284 ரன்னுக்கு ஆல் அவுட்!
இங்கிலாந்து சென்று ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி நேற்று இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் மைதானத்தில் தொடங்கியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர், கேமரூன் பான்கிராப்ட் இருவரும் களமிறக்கின்றனர். ஆட்டம் தொடக்கத்திலே டேவிட் வார்னர் 2 ரன்னில் வெளியேறினார்.
பின்னர் உஸ்மான் கவாஜா களமிறங்க தொடக்க வீரரான கேமரூன் பான்கிராப்ட் 8 ரன்னில் அவுட் ஆனார்.பிறகு இறங்கிய ஸ்டீவன் ஸ்மித் நிதானமாக விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினார்.
ஆஸ்திரேலியா அணியில் அடுத்தடுத்து இறங்கிய அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேற 122 ரன்னில் 8 விக்கெட்டை இழந்து ஆஸ்திரேலியா அணி பரிதாப நிலையில் இருந்தது. நிதானமாகவும் ,அதிரடியாகவும் விளையாடிய ஸ்டீவன் ஸ்மித் அணியை பரிதாப நிலையில் இருந்து மீட்டு வந்தார்.
இப்போட்டியில் ஸ்டீவன் ஸ்மித் 144 ரன்கள் குவித்தார்.டெஸ்ட் போட்டிகளில் தனது 24 சத்தத்தை பூர்த்தி செய்தார். ஆஸ்திரேலியா அணி அனைத்து விக்கெட்டை இழந்து 284 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்ஸ் முடிந்தது. இங்கிலாந்து அணியில் ஸ்டூவர்ட் பிராட் 5 விக்கெட்டையும் , கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டையும் பறித்தனர்.