ஆஸ்திரேலியா- இங்கிலாந்து இடையே இன்று 4-ஆம் நாள் ஆட்டம் நடைபெறவுள்ளது.
ஆஸ்திரேலியா- இங்கிலாந்து இடையே 2-வது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தனர். முதலில் இறங்கிய ஆஸ்திரேலியா 2-வது நாள் ஆட்டத்தில் 9 விக்கெட் இழந்து 473 ரன்கள் எடுத்தபோது டிக்ளேர் செய்தது. மீதம் இருந்த நேரத்தில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது.
2-வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 2 விக்கெட் இழந்து 17 ரன்கள் எடுத்திருந்தது. நேற்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. சிறப்பாக விளையாடிய டேவிட் மலான் 80 , ஜோ ரூட் 62 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர். அடுத்தடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற இறுதியாக இங்கிலாந்து அணி 84.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 236 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.
இதனால், ஆஸ்திரேலிய அணி தன்னுடைய 2-வது இன்னிங்ஸை 237 ரன்கள் முன்னிலையுடன் தொடங்கியது. நேற்றைய 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட் இழந்து 45 ரன் எடுத்து 282 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், இன்று 4-ஆம் நாள் ஆட்டம் நடைபெறவுள்ளது. களத்தில் மார்கஸ் ஹாரிஸ் 21*, மைக்கேல் நெசெர் 2 * ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…