ஆஷஸ் தொடரின் 2-போட்டியின் 2-வது நாள் ஆட்டம் இன்று தொடங்கவுள்ளது.
ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் இடையே 5 டெஸ்ட்போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டேஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றது. நேற்று இரண்டாவது போட்டி தொடங்கியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி ஆஸ்திரேலிய அணி தொடக்க வீரர்களின் ஒருவரான மார்கஸ் ஹாரிஸ் 3 ரன்கள் மட்டுமே அடித்து வெளியேறினார்.
பின்னர், டேவிட் வார்னர், மார்னஸ் லாபுசாக்னே இருவரும் நிதானமாக விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். சிறப்பாக விளையாடிய டேவிட் வார்னர்சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 167 பந்துகளில் 95 ரன்கள் எடுத்து அவுட்டானார். முதல் டெஸ்டிலும் 6 ரன்களில் சதத்தை தவறவிட்டார். அடுத்து ஸ்மித் களமிறங்கினர்.
இறுதியாக முதல் நாள் ஆட்டம் முடிவில் ஆஸ்திரேலிய அணி 89 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்கள் எடுத்துள்ளது.களத்தில் மார்னஸ் லாபுசாக்னே 95* ரன்களுடனும், கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் 18* ரன் எடுத்து விளையாடி வருகின்றனர். இங்கிலாந்து அணியில் ஸ்டூவர்ட் பிராட் , பென் ஸ்டோக்ஸ் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர். இந்நிலையில், இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கவுள்ளது.
ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீர், ஆனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் ஏப்ரல் 22 அன்று மாலை தீவிரவாதிகள்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…