இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டிக்கான லெவன் அணியை ஆஸ்திரேலியா அறிவித்தது.
2 வருடங்களுக்கு ஒருமுறை வரும் ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதி வருகிறது. இந்த வருடம் ஆஷஸ் தொடர் டிசம்பர் 8-ஆம் தேதி ஜனவரி 27ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது. இந்த ஆஷஸ் தொடரில் மொத்தம் 5 டெஸ்ட் போட்டிகள் நடைபெறவுள்ளது.
கடந்த 2019-ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆஷஸ் தொடர் 2-2 என சமனில் முடிந்ததால் இந்த வருடம் நடைபெறவுள்ள ஆஷஸ் தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், முதல் ஆஷஸ் டெஸ்ட் போட்டிக்கான தனது ஆடும் லெவன் அணியை கேப்டன் பாட் கம்மின்ஸ் அறிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா அணி வீரர்கள்:
மார்கஸ் ஹாரிஸ், டேவிட் வார்னர், மார்னஸ் லாபுஷாக்னே, ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், நாதன் லியான், ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ஆஷஸ் தொடரில் நடைபெற்ற 335 டெஸ்ட்களில் 136-ல் ஆஸ்திரேலியாவும், 108-ல் இங்கிலாந்து அணியும் வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : விடாமுயற்சி திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிப்ரவரி 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படம் கலவையான விமர்சனத்தை…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்துள்ளது. …
புதுச்சேரி : காரைக்கால் கந்தூரி விழாவை முன்னிட்டு, அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என மாவட்ட புதுச்சேரி…
திருநெல்வேலி : முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் இன்று (7.2.2025) திருநெல்வேலியில் நடைபெற்ற அரசு விழாவில், 75,151 பயனாளிகளுக்கு 167 கோடி ரூபாய்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடர் இந்த மாதம் தொடங்கப்படவுள்ள நிலையில், இந்திய அணி ரசிகர்களின் முழு கவனமும் ரோஹித் ஷர்மாவின்…
திருச்சி : மாவட்டம் மணப்பாறையில் உள்ள மணப்பாறைபட்டி சாலையில் சிபிஎஸ்இ தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த பள்ளியில் படித்து…