3-வது நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 17 ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழந்து 45 ரன் எடுத்து 282 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
ஆஸ்திரேலியா- இங்கிலாந்து இடையே 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர்நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து 2-வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தனர். இதைத்தொடர்ந்து, முதலில் இறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழந்து 221 ரன்கள் எடுத்தனர்.
பின்னர், நேற்று நடந்த 2-வது நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் இழந்து 473 ரன்கள் எடுத்தபோது டிக்ளேர் செய்தது. இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ் 3, ஜேம்ஸ் ஆண்டர்சன் 2 விக்கெட்டை பறித்தனர். மீதம் இருந்த நேரத்தில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. 2-வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 2 விக்கெட் இழந்து 17 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில் இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது.
சிறப்பாக விளையாடி டேவிட் மலான், ஜோ ரூட் ரன்கள் குவித்தனர். இருப்பினும் டேவிட் மலான் 80 , ஜோ ரூட் 62 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர். அடுத்தடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற மத்தியில் இறங்கிய கிறிஸ் வோக்ஸ் 24, பென் ஸ்டோக்ஸ் 34 ரன்கள் எடுக்க இறுதியாக இங்கிலாந்து அணி 84.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 236 ரன்கள் மட்டுமே எடுத்தனர். மிட்செல் ஸ்டார்க் 4, நாதன் லயன் 3, கேமரூன் கிரீன் 2 விக்கெட்டை பறித்தனர்.
இதனால், ஆஸ்திரேலிய அணி தன்னுடைய 2-வது இன்னிங்ஸை 237 ரன்கள் முன்னிலையுடன் தொடங்கியது. தொடக்க வீரராக களமிறங்கிய டேவிட் வார்னர் 13 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். இதைத்தொடர்ந்து, 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 17 ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழந்து 45 ரன் எடுத்து 282 ரன்கள் முன்னிலையில் உள்ளது. களத்தில் மார்கஸ் ஹாரிஸ் 21*, மைக்கேல் நெசெர் 2 * ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
அமெரிக்கா : நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியதாக 104 இந்தியர்களை அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்ட விஷயம் பெரிய…
சென்னை : விடாமுயற்சி திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிப்ரவரி 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படம் கலவையான விமர்சனத்தை…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்துள்ளது. …
புதுச்சேரி : காரைக்கால் கந்தூரி விழாவை முன்னிட்டு, அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என மாவட்ட புதுச்சேரி…
திருநெல்வேலி : முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் இன்று (7.2.2025) திருநெல்வேலியில் நடைபெற்ற அரசு விழாவில், 75,151 பயனாளிகளுக்கு 167 கோடி ரூபாய்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடர் இந்த மாதம் தொடங்கப்படவுள்ள நிலையில், இந்திய அணி ரசிகர்களின் முழு கவனமும் ரோஹித் ஷர்மாவின்…