ஆஷஸ் தொடர்: முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலிய அணி 1/61..!

Published by
murugan

முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலிய அணி 1 விக்கெட்டை இழந்து 16 ஓவரில் 61 ரன்கள் எடுத்து உள்ளனர்.

இங்கிலாந்து ஆஸ்திரேலியா இடையே 3-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீசியது செய்தனர்.  இதைத் தொடர்ந்து தொடக்க வீரர்களாக ஹசீப் ஹமீத்,
சாக் கிராலி இருவரும் களமிறங்கினர். வந்த வேகத்தில் ஹசீப் ஹமீத் டக் அவுட் ஆனார். பின்னர் களமிறங்கிய டேவிட் மாலன் 14 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார்.

அடுத்து களமிறங்கிய கேப்டன் ஜோ ரூட் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதம் விளாசி தனது விக்கெட்டை பறிகொடுத்து வெளியேற பின்னர் மத்தியில் களமிறங்கிய பென் ஸ்டோக்ஸ், ஜானி பேர்ஸ்டோவ் இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பென் ஸ்டோக்ஸ் 25, ஜானி பேர்ஸ்டோவ் 35 ரன்கள் எடுக்க பின்னர் களமிறங்கிய அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேறினார்.

இறுதியாக இங்கிலாந்து அணி 65.1 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 185  ரன்கள் மட்டுமே எடுத்தனர். ஆஸ்திரேலிய அணியில் கம்மின்ஸ், நாதன் லியோன் தலா 3 விக்கெட்டும், மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட் பறித்தார். இதையடுத்து இன்றைய மீதம் இருந்த நேரத்தில் ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. மார்கஸ் ஹாரிஸ், டேவிட் வார்னர் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

நிதானமாக விளையாடி வந்த டேவிட் வார்னர் 38 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். இறுதியாக முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட்டை இழந்து 16 ஓவரில் 61 ரன்கள் எடுத்து உள்ளனர்.

 

Published by
murugan

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

15 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

15 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

16 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

16 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

16 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

16 hours ago