ஆஷஸ் தொடர்: முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலிய அணி 1/61..!

முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலிய அணி 1 விக்கெட்டை இழந்து 16 ஓவரில் 61 ரன்கள் எடுத்து உள்ளனர்.
இங்கிலாந்து ஆஸ்திரேலியா இடையே 3-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீசியது செய்தனர். இதைத் தொடர்ந்து தொடக்க வீரர்களாக ஹசீப் ஹமீத்,
சாக் கிராலி இருவரும் களமிறங்கினர். வந்த வேகத்தில் ஹசீப் ஹமீத் டக் அவுட் ஆனார். பின்னர் களமிறங்கிய டேவிட் மாலன் 14 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார்.
அடுத்து களமிறங்கிய கேப்டன் ஜோ ரூட் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதம் விளாசி தனது விக்கெட்டை பறிகொடுத்து வெளியேற பின்னர் மத்தியில் களமிறங்கிய பென் ஸ்டோக்ஸ், ஜானி பேர்ஸ்டோவ் இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பென் ஸ்டோக்ஸ் 25, ஜானி பேர்ஸ்டோவ் 35 ரன்கள் எடுக்க பின்னர் களமிறங்கிய அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேறினார்.
இறுதியாக இங்கிலாந்து அணி 65.1 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 185 ரன்கள் மட்டுமே எடுத்தனர். ஆஸ்திரேலிய அணியில் கம்மின்ஸ், நாதன் லியோன் தலா 3 விக்கெட்டும், மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட் பறித்தார். இதையடுத்து இன்றைய மீதம் இருந்த நேரத்தில் ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. மார்கஸ் ஹாரிஸ், டேவிட் வார்னர் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
நிதானமாக விளையாடி வந்த டேவிட் வார்னர் 38 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். இறுதியாக முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட்டை இழந்து 16 ஓவரில் 61 ரன்கள் எடுத்து உள்ளனர்.