ஆஷஸ் தொடரின் 3-வது போட்டி நாளை மெல்போர்ன் மைதானத்தில் அதிகாலை 5 மணிக்கு தொடங்கவுள்ளது.
ஆஸ்திரேலியா- இங்கிலாந்து இடையே 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஏற்கனவே 2 போட்டிகள் முடிந்துள்ளது. அதில், ஆஸ்திரேலியா அணி 2 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. முதல் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியில் 275 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில், 3-வது போட்டி நாளை மெல்போர்ன் மைதானத்தில் அதிகாலை 5 மணிக்கு தொடங்கவுள்ளது. இப்போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை மீண்டும் தங்கள் வசம் வைத்துக்கொள்ள ஆஸ்திரேலியாவும், கோப்பையை ஆஸ்திரேலியா கைப்பற்ற கூடாது என்ற முனைப்புடன் இங்கிலாந்து அணி விளையாட உள்ளனர்.
ஆஸ்திரேலியா கேப்டன் கம்மின்ஸ் அணிக்கு திரும்பி உள்ளார். ஹேசல்வுட் காயம் காரணமாக இந்த போட்டியிலும் விளையாடவில்லை. இங்கிலாந்து அணியில் பர்ன்ஸ், பிராட், ஒல்லிபோப் ஆகியோருக்கு பதிலாக பேர்ஸ்டோவ், ஜாக்லீச், மார்க்வுட் களமிறங்கவுள்ளனர்.
2019-ல் நடைபெற்ற ஆஷஸ் தொடர் 2-2 என சமனில் முடிந்தது. 2017-18 ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலியா வென்றதால் ஆஷஸ் கோப்பை அவர்களிடம் உள்ளது. இதுவரை நடைபெற்ற 71 ஆஷஸ் தொடர்களில் 33-ல் ஆஸ்திரேலியாவும், 32-ல் இங்கிலாந்தும் வென்றுள்ளன. 6 தொடர்கள் சமனில் முடிந்துள்ளன.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…