Ashes series 2021-22: 17 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிப்பு!
ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள ஆஷஸ் போட்டிக்கான 17 பேர் கொண்ட வீரர்களை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு.
ஆஷஸ் தொடர் என்பது ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடராகும். இந்தத் தொடர் 2 ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படுவது வழக்கம்.
ஆனால், ஆஸ்திரேலியாவில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக இந்தாண்டு ஆஷஸ் தொடர் நடைபெறுமா? என்ற சந்தேகம் எழுந்த நிலையில், ஆஷஸ் தொடரில் பங்கேற்க இங்கிலாந்து வீரர்கள் ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வது உறுதியானது.
இந்த நிலையில் Ashes series 2021-22 தொடருக்கான 17 பேர் கொண்ட வீரர்களை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் ஆஷஸ் தொடரில் முதல் முறையாக துணை கேப்டன் ஜோஸ் பட்லர் உட்பட 17 பேரில் பத்து பேர் சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர். நடப்பாண்டு ஆஷஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் 2021 டிசம்பர் மாதத்தில் தொடங்குகிறது.
ஆஷஸ் தொடர் 2021-22 – இங்கிலாந்து டெஸ்ட் அணி வீரர்கள்:
ஜோ ரூட் (கேப்டன்), ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜானி பேர்ஸ்டோ, டோம் பெஸ், ஸ்டூவர்ட் பிராட், ரோரி பர்ன்ஸ், ஜோஸ் பட்லர் (துணை கேப்டன்), ஜாக் க்ராலி, ஹசீப் ஹமீட், டான் லாரன்ஸ், ஜாக் லீச், டேவிட் மாலன், கிரேக் ஓவர்டன், ஒல்லி போப், ஒல்லி ராபின்சன், கிறிஸ் வோக்ஸ், மார்க் வூட் ஆகிய 17 பேர் இடம்பெற்றுள்ளனர்.
இதில் கிரிக்கெட்டிலிருந்து காலவரையற்ற இடைவெளியை எடுத்து வரும் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் மற்றும் முதுகில் காயம் காரணமாக மற்றொரு ஆல் ரவுண்டர் சாம் கர்ரனும் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடப்படுகிறது.
HERE IT IS!
Our squad for the England Men’s Ashes Tour of Australia 2021-22 ????????????
— England Cricket (@englandcricket) October 10, 2021