ஆஷஸ் போட்டி : ஆர்ச்சர் வேகப்பந்தில் சீட்டுகட்டு போல சரிந்த ஆஸ்திரேலியா அணி…!
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணி இடையே ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இரண்டு போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி 1-0 கணக்கில் முன்னிலையில் உள்ளது.
நேற்று லீட்ஸ் மைதானத்தில் மூன்றாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணியின் டேவிட் வார்னர் , மார்கஸ் ஹாரிஸ் இருவரும் களமிறங்கினார். ஆட்டம் தொடக்கத்திலேயே மார்கஸ் ஹாரிஸ் 8 ரன்களில் வெளியேற பின்னர் களமிறங்கிய உஸ்மான் கவாஜா 8 ரன்களில் வெளியேறினார்.
நிதானமாக விளையாடிய டேவிட் வார்னர் 61 ரன்கள் குவித்தார். அடுத்து களமிறங்கிய அனைத்து வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற ஆஸ்திரேலிய அணி 52.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் 179 ரன்கள் எடுத்தது.
ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக டேவிட் வார்னர் 61 , மார்னஸ் லாபுசாக்னே 74 ரன்கள் குவித்தனர். இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆர்ச்சர் சிறப்பான பந்துவீச்சால் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.இன்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்க உள்ளது.