இங்கிலாந்து , ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளுக்கு இடையிலான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. மூன்றாவது டெஸ்ட் போட்டி கடந்த 22-ம் தேதி லீட்ஸ் மைதானத்தில் தொடங்கியது.
அதில் டென்லி மட்டும் 12 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஹாஸ்ல்வுட் 4 , கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஆஸ்திரேலிய அணி112 ரன்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கி 246 ரன்கள் குவித்தது. இதில் ஸ்டோக்ஸ் 3, ஆர்ச்சர் 2 விக்கெட்டையும் பறித்தனர்.
இதனை தொடர்ந்து 359 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 67 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனதால் 300 ரன்களுக்கு மேல் அடிப்பது கடினம் என பலர் எண்ணினார்.
இந்நிலையில் தொடக்க வீரர்கள் ரோரி பர்ன்ஸ் 7 ,ஜேசன் ராய் 8 ரன்னுடன் வெளியேறினர். அதன் பின்னர் ஜோ ரூட் , ஜோ டென்லி இருவரும் கைகோர்த்து அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். ஜோ ரூட் 77 , ஜோ டென்லி 50 ரன்களுடன் வெளியேற பின்னர் இங்கிலாந்து அணி 286 ரன்களுக்கு 9 விக்கெட்டை இழந்து பரிதாப நிலையில் இருந்தது.
அப்போது பென்ஸ்டாக் மற்றும் ஜாக் லீச் இருவர் மட்டுமே இருந்தன. லீட்சை மறுமுனையில் வைத்துக்கொண்டு பென் ஸ்டோக்ஸ் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன் மூலம் இங்கிலாந்து அணி இறுதியாக 125.4 ஓவரில் 362 ரன்கள் குவித்து.இங்கிலாந்து அணி மாபெரும் வெற்றி பெற்றது.
பென்ஸ்டாக் 135 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார். இப்போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றதன் மூலம் டெஸ்ட் தொடரில் 1 – 1 என சமநிலையில் இரு அணிகளும் உள்ளது.
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. இதில்…
கொல்கத்தா : ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் இன்று…
டெல்லி : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று அமெரிக்காவில் இறக்குமதியாகும் அயல்நாட்டு பொருட்கள் மீது அதிகப்படியான புதிய பரஸ்பர…
மதுரை : இன்று மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநாடு நடைபெற்று வருகிறது. வரும் ஏப்ரல் 6ஆம் தேதி…
சென்னை : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை…