ஆஷஸ் போட்டி : ஆர்சர் வீசிய பவுன்சரில் அடிபட்ட ஸ்மித் விலகல்!
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸ்ஸில் இங்கிலாந்து அணி 258 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் இழந்து 250 ரன்கள் மட்டுமே எடுத்தது.
முதல் இன்னிங்ஸ்ஸில் 92 ரன்கள் எடுத்து ஸ்டீவன் ஸ்மித் ஆட்டமிழந்தார்.ஸ்மித் 70 ரன்கள் எடுத்திருந்த போது இங்கிலாந்து அணியின் வேக பந்து வீச்சாளர் ஆர்ச்சர் வீசிய பந்தை எதிர்கொள்ள முடியாமல் தனது கையில் அடிவாங்கி தடுமாறினார்.
பிறகு 80 ரன்கள் எடுத்த போது மீண்டும் ஆர்ச்சர் வீசிய பந்து ஸ்டீவன் சுமித் கழுத்தை பதம் பார்த்தது 140 கிலோமீட்டர் வேகத்தில் வந்த ஆர்ச்சர் பந்து கழுத்தில் அடித்து நிலைகுலைந்து மைதானத்தில் ஸ்டீவன் சுமித் கீழே சுருண்டு விழுந்தார்.
இந்நிலையில் காயம் காரணமாக ஸ்டீவன் ஸ்மித்திற்குப் பதிலாக மாற்று வீரராக மார்னஸ் லபுஸ்சேக்னே களம் இறங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி டிரா ஆனது.