ஆஷஸ் : 111-வருடத்திற்கு பிறகு ஒரு விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து ..!

இங்கிலாந்து , ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளுக்கு இடையிலான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. மூன்றாவது டெஸ்ட் போட்டி கடந்த 22-ம் தேதி லீட்ஸ் மைதானத்தில் தொடங்கி நேற்று முடிந்தது.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. தனது முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 179 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனார்.இங்கிலாந்து அணி சார்பில் ஆர்ச்சர் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 67 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.
ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஹாஸ்ல்வுட் 4 , கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஆஸ்திரேலிய அணி112 ரன்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கி 246 ரன்கள் குவித்தது. இதில் ஸ்டோக்ஸ் 3, ஆர்ச்சர் 2 விக்கெட்டையும் பறித்தனர்.
இதனை தொடர்ந்து 359 ரன்கள் இலக்குடன் இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களின் சொதப்பலான ஆட்டத்தால் 286 ரன்களுக்கு 9 விக்கெட்டை இழந்தது.
இதனால் கடைசி ஒரு விக்கெட்டுக்கு 76 ரன்கள் எடுக்கவேண்டிய நிலைமை இங்கிலாந்து அணிக்கு ஏற்பட்டது.இதை தொடர்ந்து களத்தில் நின்ற ஜாக் லீச் , பென் ஸ்டோக்ஸ் இருவரின் நிதானமான ஆட்டத்தால் இங்கிலாந்து அணி திகில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் இங்கிலாந்து அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இதற்கு முன் 1908-ம் ஆண்டு நடந்த ஆஷஸ் போட்டியில் இங்கிலாந்து அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அதன் பின்னர் 111-வருடத்திற்கு பிறகு நேற்று நடந்த ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் தான் இங்கிலாந்து அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போட்டியில் பென் ஸ்டோக்ஸ் அதிரடி ஆட்டத்தால் 135 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் நின்றார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பெரும் சோகம்.! அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ காலமானார்!
March 26, 2025
GT vs PBKS: பேட்டிங்கிலும் பந்து வீச்சிலும் மிரட்டிய பஞ்சாப்.! தோல்வியை தழுவிய குஜராத்.!
March 25, 2025
GT vs PBKS: பொளந்து கட்டிய ஸ்ரேயாஸ் ஐயர்… மிரண்டு போன குஜராத்துக்கு இது தான் டார்கெட்.!
March 25, 2025
பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா காலமானார்.!
March 25, 2025