ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. நேற்று 5-வது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் தொடங்கியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி ஆட்டம் தொடக்கத்தில் சிறப்பாக விளையாடினர். பின்னர் ஜோ ரூட் விக்கெட்டை இழந்த பிறகு களம் இறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். மத்தியில் நிதானமாக விளையாடிய பட்லர் சிறப்பாக விளையாடினார்.
நேற்றைய ஆட்ட முடிவில் இங்கிலாந்து 8 விக்கெட் இழந்து 271 ரன்கள் எடுத்தது. ஜோ ரூட் , பட்லர் அரைசதம் விளாசினார். களத்தில் பட்லர் 64 , ஜாக் லீச் 10 ரன்களுடன் இருந்தனர். ஆஸ்திரேலியா அணி பந்து வீச்சில் மிட்செல் மார்ஷ் 4 விக்கெட்டை வீழ்த்தினார்.
இன்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கிய இங்கிலாந்து அணி 294 ரன்களுக்கு அல் அவுட் ஆனது.மிட்செல் மார்ஷ் 5 விக்கெட்டையும் , பாட் கம்மின்ஸ் 3 விக்கெட்டையும் வீழ்த்தினர். பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 17 ஓவருக்கு 2 விக்கெட்டை இழந்து 49 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…