ஆஸ்திரேலியா அணி 275 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலியா- இங்கிலாந்து இடையே 2-வது டெஸ்ட் போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தனர். முதலில் இறங்கிய ஆஸ்திரேலியா 2-வது நாள் ஆட்டத்தில் 9 விக்கெட் இழந்து 473 ரன்கள் எடுத்தபோது டிக்ளேர் செய்தது. மீதம் இருந்த நேரத்தில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது.
சொதப்பலாக விளையாடிய இங்கிலாந்து அணி 84.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 236 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இதனால், ஆஸ்திரேலிய அணி தன்னுடைய 2-வது இன்னிங்ஸை 237 ரன்கள் முன்னிலையுடன் தொடங்கியது. சிறப்பாக விளையாடிய ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுகள் இழந்து 230 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதனால், இங்கிலாந்து அணிக்கு 468 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, இங்கிலாந்து அணி தனது 2-வது இன்னிங்ஸை தொடங்கியது.
நேற்றைய 4-ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 43.2 வது ஓவரில் 4 விக்கெட்டுகள் இழந்து 82 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில், இன்று கடைசி மற்றும் 5-வது நாள் ஆட்டம் தொடங்கி நடைபெற்றது. ஆட்டம் தொடங்கியதில் இருந்து களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுக்க மத்தியில் இறங்கிய கிறிஸ் வோக்ஸ் 44, ஜோஸ் பட்லர் 26 ரன்கள் மட்டும் எடுக்க இறுதியாக இங்கிலாந்து அணி 113.1 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 192 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.
இதனால், இங்கிலாந்து அணியை 275 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது. 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் முதல் 2 போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றுள்ளது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இரு அணிகளும் இடையே வரும் 26-ஆம் தேதி 3-வது டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள போச்சம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை அதே…
டெல்லி : மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பையை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய…
அமெரிக்கா : நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியதாக 104 இந்தியர்களை அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்ட விஷயம் பெரிய…
சென்னை : விடாமுயற்சி திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிப்ரவரி 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படம் கலவையான விமர்சனத்தை…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்துள்ளது. …
புதுச்சேரி : காரைக்கால் கந்தூரி விழாவை முன்னிட்டு, அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என மாவட்ட புதுச்சேரி…