ஆஷஸ் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியுள்ளது.
இங்கிலாந்தில் இந்த ஆண்டு வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் தொடரின் முதல் போட்டி கடந்த ஜூன் 16ஆம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து, 393/8 ரன்கள் எடுத்து முதல் நாளிலேயே டிக்ளர் செய்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் 118 ரன்களும், ஜேக் க்ராலி 61 ரன்கள், மற்றும் ஜானி பேர்ஸ்டோ 78 ரன்களும் எடுத்தனர்.
இதனை அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் உஸ்மான் கவாஜாவின்(141 ரன்கள்) சதத்துடன் 386 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இரண்டாவது 7 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்ததன் மூலம் 273 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது.
பின்னர் 281 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி தொடக்க வீரர் க்வாஜா இரண்டாவது இன்னிங்சிலும் சிறப்பாக விளையாடி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். அவர் 65 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இறுதி நாளில் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 177 எண்கள் தேவைப்பட்ட நிலையில், முக்கிய வீரர்களான ஸ்மித், லபுஸ்சான் ஏமாற்றம் அளித்தனர்.
கேப்டன் கம்மின்ஸ்(44* ரன்கள்) பொறுப்பாக விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இதன் மூலம் 8 விக்கெட்களை இழந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி 282 ரன்கள் குவித்து முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. இரண்டு இன்னிங்சிலும் சிறப்பாக விளையாடிய க்வாஜா ஆட்டநாயகன் விருது பெற்றார்.
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3),…
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…
சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…