டி-20 உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஒரே குரூப்பில் இடம் பெற்றுள்ள நிலையில்,ரசிகர்களின் அற்புதமான ட்வீட்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
இந்தியாவில் நடைபெறவிருந்த டி-20 உலகக் கோப்பை கொரோனா காரணமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமான் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. டி-20 உலகக் கோப்பை போட்டியானது அக்டோபர் 17 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 14 ஆம் தேதி நிறைவடைகிறது.
இந்நிலையில், டி-20 உலகக்கோப்பை போட்டியில் விளையாடும் 12 அணிகள் இரு பிரிவுகளாக பிரித்து ஐசிசி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 2-வது குரூப்பில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இடம் பெற்றுள்ளன. டி20 உலகக் கோப்பை போட்டி அட்டவணை இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி,இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே குரூப்பில் இடம் பெற்றுள்ளதால் இதுகுறித்து கிண்டலடிக்கும் வகையில் கிரிக்கெட் ரசிகர்கள் மீம்ஸ்களை ட்வீட்கள் மூலம் பகிர்ந்து வருகின்றனர்.மேலும்,இவை சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இரு அணிகளும் கடைசியாக மோதியது எப்போது?
கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூன் 16 ஆம் தேதியன்று நடைபெற்ற ஐசிசி உலகக் கோப்பை போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொண்டன.இதில் இந்தியா 89 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…
சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…