அர்ஷதீப் சிங்: டி20 உலகக்கோப்பை தொடரில் நேற்று இந்திய அணி, அமெரிக்க அணியை தோற்கடிக்க முக்கிய காரணமாக அமைந்த அர்சதீப் சிங் புதிய சாதனையை படைத்ததுடன், போட்டி முடிந்த பிறகு பேசி இருக்கிறார்.
டி20 உலகக்கோப்பை தொடரில் அமெரிக்கா அணியை எதிர்த்து இந்திய அணி நேற்று விளையாடியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தனர். அதனால் பேட்டிங் வந்த அமெரிக்கா அணியின் தொடக்க வீரர்கள், அர்ஷதீப் சிங் பந்து வீச்சில் சிக்கி வெளியேறினார்கள். அவர் வீசிய முதல் ஓவரில் 2 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.
மேலும், 4 ஓவர்கள் பந்து வீசிய அவர் 9 ரன்களை விட்டுகொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். இதன் மூலம் இந்திய அணிக்காக டி20 உலகக்கோப்பையில் சிறப்பான பந்து வீச்சை வீசிய பட்டியலில் அஸ்வினை தாண்டி முதலிடத்தில் தனது பெயரை பதிவு செய்து இந்திய அளவில் சாதனை படைத்துள்ளார். இந்த போட்டி முடிந்த பிறகு அர்ஷதீப் சிங் இந்த போட்டியில் விளையாடியதை குறித்து பேசி இருந்தார்.
அவர் கூறுகையில், “இந்த போட்டியில் எனது பந்து வீச்சை நினைத்து மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஏனென்றால், கடந்த 2 போட்டிகளில், நான் பந்து வீச்சில் கூடுதலாக சில ரன்களை விட்டுக் கொடுத்தேன். அதனால் நான் கொஞ்சம் கூட நிம்மதியில்லாமலே இருந்தேன். ஆனால், என் அணி நிர்வாகமும், என் அணி கேப்டனும் என் மீது நம்பிக்கை வைத்து இந்த போட்டிக்கு வாய்ப்பு கொடுத்தனர்.
அந்த நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் என்று நினைத்திருந்தேன். இந்த நியூயார்க் பிட்ச் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு நல்ல உதவியாக இருந்தது.அதனை பயன்படுத்தி நன்றாக பந்து வீசினேன். எங்களின் திட்டமும் சாதாரணமாக வைத்திருந்தோம். பிட்சில் சரியான இடத்தில் பந்தை வீசினாலே போதும், மற்ற அனைத்தையும் பிட்ச் செய்துவிடும் என்று திட்டமிட்டோம்.
அதனால் நல்ல பந்தை வீச வேண்டும் என்பதே எனது திட்டமாக இருந்தது. இதுபோன்ற பிட்ச்களில் தான், அங்கு நிலவும் சூழலையும் பயன்படுத்தி விளையாட வேண்டும்”, என்று கூறி இருந்தார்.
பெர்த் : ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் தடுமாறினாலும் அதன்பிறகு பவுலிங்கில் இந்திய அணி…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது. தங்கத்தின் விலை கடந்த வாரம் சவரனுக்கு ரூ.3,000…
சென்னை : தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு…
சென்னை : இன்று சர்வதேச அளவில், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, தமிழக வெற்றிக்…
ஜெருசலேம் : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் பதற்றம் தணிந்து வராத வண்ணம் ஒரு பக்கம் இருந்து வருகிறது.…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது தொடங்கியுள்ளது. இன்று (நவம்பர் 25) தொடங்கிய இந்த கூட்டத்தொடர் வரும் டிசம்பர்…