நீங்க சிறந்த அணியா? அப்போ இதை பண்ணுங்க பாப்போம்! இந்தியாவுக்கு சவால் விட்ட பாகிஸ்தான் ஜாம்பவான்!
எங்கள் எதிராக 10 டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆட்டங்கள் விளையாடுங்கள் என இந்திய அணிக்கு பாகிஸ்தான் முன்னாள் வீரர் முஷ்டாக் சவால் விடுத்து பேசியுள்ளார்.

டெல்லி : கிரிக்கெட் போட்டிகளை பொறுத்தவரையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதும் போட்டிகள் என்றாலே ஒரு தனி எதிர்பார்ப்பு என்று சொல்லலாம். இரண்டு அணிகள் மோதும் போட்டியை எல் கிளாசிகோ என்று கூட சொல்லலாம். அந்த அளவுக்கு இரண்டு அணிகளும் மோதும் போட்டி பரபரப்பாக யார் வெற்றிபெறப்போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிடும். இதுவரை இந்த இரண்டு அணிகளும் 207 போட்டிகள் மோதிய நிலையில் பாகிஸ்தான் 88 வெற்றிகளுடன் முன்னிலையில் உள்ளது. இந்தியா 75 முறை வெற்றிபெற்றுள்ளது.
மொத்தமாக பாகிஸ்தான் அணி அதிகமாக வெற்றிபெற்றிருந்தாலும் கூட ஐ.சி.சி போட்டிகளில் 22 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. அதில் இந்தியா தான் 17 முறை வெற்றிபெற்றுள்ளது. பாகிஸ்தான் அணி 4 போட்டியில் மட்டும் தான் வெற்றிபெற்றுள்ளது. கடைசியாக இருவரும் இந்த ஆண்டு சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் மோதிய நிலையில் அந்த போட்டியிலும் இந்தியா வெற்றிபெற்று தகுதி சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை உறுதி செய்தது. பாகிஸ்தான் அந்த தோல்வியின் மூலம் தொடையில் இருந்து வெளியேறியது.
எனவே பாகிஸ்தான் ரசிகர்கள் சோகத்துடன் உள்ளனர். இந்த சூழலில், இந்தியா பாகிஸ்தான் அணியை தோற்கடித்ததற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு (பி.சி.சி.ஐ) முன்னாள் பாக் வீரர் முஷ்டாக் சவால் விடுத்துள்ளார். இது குறித்து ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் அவர் பேசும்போது ” நான் அரசியல் காரணங்களை புறக்கணிதுவிட்டு இந்தியா பற்றி பேசவேண்டும் என்றால் அவர்கள் ஒரு சிறந்த அணி என்று தான் சொல்வேன். அவர்கள் நல்ல கிரிக்கெட் விளையாடுகிறார்கள். அப்படி சிறந்த அணியாக நீங்கள் இருந்தீர்கள் என்றால் நான் இப்போது ஒரு சவால் கொடுக்கிறேன். அதை செய்யுங்கள்…
அது என்ன சவால் என்றால் பாகிஸ்தானுக்கு எதிராக 10 டெஸ்ட், 10 ஒருநாள், 10 டி20 போட்டிகள் விளையாடுங்கள். அப்போது யார் சிறந்த அணி என்று தெரிந்துவிடும். நாங்கள் சரியான முறையில் தயாராகி, அதிரடியாக விளையாட தொடங்கினாள் இந்தியாவிற்கும் ஒரு வலுவான பதிலை கொடுத்துவிடுவோம். எனவே, பிசிசிஐ எங்களுக்கு எதிராக இந்த போட்டியை நடத்த ஏற்பாடு செய்யுங்கள் ” எனவும் முஷ்டாக் தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
INDvsNZ : பேட்டிங்கில் மிரட்டிய ஷ்ரேயாஸ் ஐயர்..பந்துவீச்சில் சுருட்டிய நியூசிலாந்து! டார்கெட் இது தான்..
March 2, 2025
அவரை சமாளிப்பது எல்லாம் திமுகவுக்கு தூசு மாதிரி…அமைச்சர் ரகுபதி விமர்சனம்..சீமான் சொன்ன பதில்?
March 2, 2025
குட் பேட் அக்லி படத்தில் அஜித் போட்டிருக்கும் டிரஸ் எவ்வளவு தெரியுமா? விலை கேட்டா ஷாக் ஆயிடுவீங்க!
March 2, 2025