வெளிநாட்டில் கறுப்பு பணத்தை பதுக்கினாரா..? சச்சின்..!
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் வெளிநாடுகளில் சொத்துக்களை பதுக்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் 300-க்கும் மேற்பட்ட அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், பிரபலங்கள் வெளிநாடுகளில் சொத்துக்களை பதுக்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 150-க்கும் மேற்பட்ட ஊடக நிறுவனங்கள் அடங்கிய புலனாய்வு அமைப்பு பண்டோரா பேப்பர்ஸ் என்ற பெயரில் 91 நாடுகளை சார்ந்த பிரபலங்களின் வெளிநாட்டு சொத்துக்கள் தொடர்பாக ஆய்வு முடிவுகளை சர்வதேச புலனாய்வுப் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு (ஐசிஐஜே) வெளியிட்டுள்ளது.
12 மில்லியன் ஆவணங்களை கொண்டு செய்யப்பட்ட முடிவில் 300-க்கும் மேற்பட்ட இந்தியாவை சேர்ந்த அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், பிரபலங்கள் வரி ஏய்ப்பு செய்வதற்காக வெளிநாடுகளில் சொத்துக்களை பதுக்கி இருப்பது இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்பட்டியலில், ஜோர்டான் நாட்டின் அரசர், உக்ரைன் அதிபர், கென்யா, ஈக்வெடார் நாட்டின் பிரதமர்கள், செக் குடியரசின் பிரதமர், பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேர், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் நிதிச் செயல்பாடுகள், அமெரிக்கா, துருக்கி உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் கோடீஸ்வரர்களின் பெயர்கள் அடங்கியுள்ளன.
மேலும், இந்த பட்டியலில் கிரிக்கெட் ஜாம்பவானும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான சச்சின் டெண்டுகர் பெயரும் இடம்பெற்றுள்ளது. இதுகுறித்து சச்சின் டெண்டுலர் தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், வெளிநாட்டு முதலீடுகள் அனைத்தும் சட்டப்பூர்வமானது. அரசுக்கு தெரிந்தே வெளிநாடுகளில் சச்சின் சொத்துகளை வாங்கியதாகவும் அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.