என்னையாவா ஒதுக்குறீங்க ? சொல்லி அடிக்கும் சாஹல் .. ஐபிஎல்லில் புதிய மைல்கல் !!
Yuzvendra Chahal : ஐபிஎல் தொடரில் ஒரு பவுலராக யாரும் செய்யாத புதிய சாதனையை எட்டியுள்ளார் யுஸ்வேந்திர சாஹல்.
கடந்த 2008-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் பல பல சாதனைகளை ஒரு தனி பேட்ஸ்மேனாக, ஒரு தனி பவுலராக, ஒரு அணியாக ஒரு கேப்டனாக என தற்போது வரை இந்த ஐபிஎல்லில் சாதனை என்பது நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியிலும் புதிய சாதனை ஒன்றை ராஜஸ்தானை அணியின் சுழல் பந்து வீச்சாளரன யுஸ்வேந்திர சாஹல் படைத்துள்ளார்.
அது என்னவென்றால் ஒரு பவுலராக அதுவும் சூழல் பந்து வீச்சாளராக ஐபிஎல் தொடரில் முதல் முதலில் 200 விக்கெட்டுகளை எடுத்து இந்த புதிய சாதனையை படைத்துள்ளார். நேற்று ராஜஸ்தான்-மும்பை அணியுடனான போட்டியில் ராஜஸ்தான் அணி 9 விக்கெட் வித்யாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் மும்பை பேட்ஸ்மேன்களை எதிர்த்து பந்து வீசிய இவர் 4 ஓவர்கள் பந்து வீசி 48 ரன்கள் விட்டு கொடுத்து வெறும் 1 விக்கெட்டை வீழ்த்தி இருந்தார்.
இந்த 1 விக்கெட் எடுத்ததன் மூலம் அதுவும் மும்பை அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது ஒரு பக்கபலமாக விளையாடிய முகமது நபியின் விக்கெட்டை எடுத்து இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளார். ஐபிஎல் தொடரில் இதுவரை எந்த ஒரு பவுலரும் 200 விக்கெட்டுகளை தொட்டதில்லை. அதுவும் ஒரு ஸ்பின் பவுலராக இந்த சாதனையை படைப்பது ஒன்றும் சாதாரண விஷயம் இல்லை.
ஐபிஎல் தொடரில் இதற்கு முன், முதன் முதலில் 50 விக்கெட்டுகளை எடுத்தவர் ஆர்.பி.சிங் ஆவார். அதன் பின் முதல் 100 மற்றும் 150 விக்கெட்டுகளை எடுத்துவர் லசித் மலிங்கா ஆவார். அதை தொடர்ந்து முதல் 200 விக்கெட்டுகளை எடுத்த பெருமையை யுஸ்வேந்திர சாஹல் தட்டி சென்றுள்ளார். இவர் இந்த மைல்கல்லை எட்ட 13 வருடங்கள் ஆகியுள்ளது அதாவது ஐபிஎல் தொடரில் முதன் முதலில் 2011-ம் ஆண்டு மும்பை அணிக்காக இவர் அறிமுகமானார்.
அதன் பின் 2014-ம் ஆண்டு பெங்களூரு அணியில் இடம்பெற்று பெங்களூரு அணிக்காக ஒரு பவுலராக 100 விக்கெட்டுகளை தனிப்பட்ட முறையில் எடுத்துள்ளார். இவர் பெங்களூரு அணிக்காக மட்டும் 139 விக்கெட்டுகளை எடுத்துள்ளார், மேலும் தற்போது இவர் விளையாடி கொண்டிருக்கும் ராஜஸ்தான் அணிக்காக 61 விக்கெட்டுகள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இவரை கடந்த டி20 உலகக்கோப்பையிலும், 50 ஓவர் உலகக்கோப்பையிலும் இவரை இந்திய அணியில் இடம்பெறவில்லை. இதனால், நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு போட்டியிலும் என்னையவா அணியில் இடம்பெற வைக்கவில்லை என்று சொல்லி சொல்லி விக்கெட்டுகளை எடுத்து வருகிறார், மேலும் பர்புள் (Purple) நிற தொப்பி 13 விக்கெட்டுகளுடன் பும்ராவிற்கு அடுத்த படியாக பட்டியலில் 2-ம் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.