கேட்டதை கொடுக்கும் பிசிசிஐ ..! இந்திய அணியின் துணை பயிற்சியாளர்கள் இவர்களா?
பிசிசிஐ : நடைபெற்ற முடிந்த 20 ஓவர் உலகக்கோப்பை தொடருடன் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயலாற்றிய ராகுல் ட்ராவிட்டின் பதவிக்கலமானது நிறைவடைந்தது. மேலும், அவருடன் துணை பயிற்சியாளராக பணியாற்றிய அனைவருக்குமே பதிவிக்கலாம் என்பது முடிவடைந்தது.
இந்நிலையில், பிசிசிஐ அடுத்த பயிற்சியாளருக்கான தேடலில் இருந்து வந்தனர், மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்னாள் கவுதம் கம்பீரை தலைமை பயிற்சியாளராக நியமித்தனர். இவரது பதவிக்காலம் வரும் 2027-ம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பையுடன் முடிவடையும், தற்போது பிசிசிஐ அடுத்த கட்டமாக துணை பயிற்சியாளருக்கான தேடலில் இருந்து வருகின்றனர்.
மேலும், கவுதம் கம்பீர் தனக்கு துணை பயிற்சியாளராக அபிஷேக் நாயர் மற்றும் ரியான் டென் இவர்கள் தான் வேண்டும் என கேட்டுக் கொண்டதாக ஒரு தகவல் வெளியானது. தற்போது, கம்பீர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க பிசிசிஐ இந்திய கிரிக்கெட் அணியின் துணை பயிற்சியாளர்களாக அபிஷேக் நாயர் மற்றும் ரியான் டென் டோஸ்கேட் ஆகியோர் நியமிக்கவுள்ளதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
மேலும், பீல்டிங் பயிற்சியாளராக செயலாற்றி வந்த டி. திலீப் மேலும் அணியின் பயிற்சியாளர்க தொடருவார் என்றும் பிசிசிஐயின் நெருங்கிய வட்டாரத்தின் மூலம் இந்த தகவல் தெரியவந்துள்ளது. மேலும், பேட்டிங் மற்றும் பவுலிங் பீல்டராக இவர்கள் ஏற்கனவே ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியில் கம்பீருடன் இணைந்து பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.