சென்னை சேப்பாக்கத்தில் வரும் ஏப்.9ம் தேதி முதல் டிக்கெட் விற்பனை தொடக்கம் என அறிவிப்பு.
ஐபிஎல் தொடரின் 16-வது சீசன் கடந்த 31-ஆம் தேதி தொடங்கி நிலையில், ஒரு வாரங்களை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இம்முறை ஐபிஎல் போட்டிகள் உள்ளூர் மற்றும் வெளியூர் மைதானங்கள் அடிப்படையில் ஆட்டங்கள் நடைபெற்று வருவதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை சேப்பாக்கம்:
இதில், குறிப்பாக சென்னை ரசிகர்களுக்கு கடந்த சுமார் 3 வருடங்களாக தங்களது அணி விளையாடுவதை காண முடியாமல் இருந்து வந்தனர். இதற்கும், இவ்வாண்டு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அதாவது, சென்னை அணி, சேப்பாக்கம் மைதானத்தில் கிட்டத்தட்ட 7 போட்டிகள் விளையாட உள்ளது.
ரசிகர்கள் மகிழ்ச்சி:
இதனால் சென்னை அணி தல தோனி ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். சென்னை அணி முதல் போட்டியில் தோல்வி அடைந்தாலும் தனது இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்றது. சுமார் 3 ஆண்டுகளுக்கு பிறகு கடைபிணத்தி 3ம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் வென்றது.
மஞ்சள் நிறம் நிறைந்த மைதானம்:
தல கம் பேக் பெரிய ஆரவாரத்துடன் ரசிகர்கள் மத்தியில் இருந்தது. மைதானம் முழுவதும் மஞ்சள் நிறம் நிறைந்து காணப்பட்டது. அதுவும் டிக்கெட் விற்பனை தொடங்கிய ஒரு சில நேரங்களிலேயே நிறைவடைந்து சாதனை படைத்தது. இந்த நிலையில், சிஎஸ்கே ரசிகர்கள் மீண்டும் விசில் போட தயாராகியுள்ளனர். அதாவது, உள்ளூரில் இரண்டாவது போட்டிக்காக சென்னை சேப்பாக்கத்தில் வரும் ஏப்.9ம் தேதி முதல் டிக்கெட் விற்பனை தொடக்கம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது சுற்று – டிக்கெட் விற்பனை:
ஏப்ரல் 12ம் தேதி சென்னை எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான சென்னை சூப்பர் கிங்ஸின் இரண்டாவது ஹோம் போட்டிக்கான டிக்கெட்டுகளின் ஆன்லைன் மற்றும் கவுண்டர் விற்பனை ஏப்ரல் 9-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணி முதல் தொடங்குகிறது. PAYTM மற்றும் www.insider.in மற்றும் சேப்பாக்கம் மைதான வளாகத்தில் இரண்டு கவுண்டர்கள் மூலம் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், C, D, E, I, J, K ஸ்டாண்டுகளில் ரூ.1,500 ரூ.3,000 வரை டிக்கெட் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பொதுவான வழிமுறைகள்:
டெல்லி : நேற்று (ஜனவரி 6) மைக்ரோசாஃப்ட் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லா, பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில்…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அத்தொகுதிக்கு இன்று…
நேபாளம்: நேபாளத்தில் லாபுசே நகரில் இன்று (ஜன,7) நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 6.35 மணியளவில், நேபாள், திபெத் எல்லையில் 7.1 ரிக்டர்…
துபாய்: துபாயில் பயிற்சியின்போது நடிகர் அஜித் சென்ற ரேஸ் கார் விபத்தில் சிக்கியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதிவேகமாக வந்த…
சென்னை : ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ இவிகேஎஸ்.இளங்கோவன் மறைவை அடுத்து அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து…
சென்னை :இட்லி தோசைக்கு ஏற்ற பூண்டு பொடி தயார் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். தேவையான…