வேகத்தில் மிரட்டிய ஆர்ச்சர் ! சரிந்த ஆஸ்திரேலியா
ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து வீரர் ஆர்ச்சர் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணியை நிலைகுலைய செய்துள்ளார்.
ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து இடையே ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது.தற்போது 5-வது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது .இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 294 ரன்களுக்கு அல் அவுட் ஆனது.இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக பட்லர் 70 ரன்கள் அடித்தார்.ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சில் மார்ஷ் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனை அடுத்து தனது முதல் இன்னிங்சில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 68.5 ஓவர்களில் 225 ரன்களை அடித்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது.இந்த அணியில் ஸ்மித் மட்டும் 80 ரன்கள் அடித்தார்.அபாரமாக பந்துவீசிய இங்கிலாந்து வீரர் ஆர்ச்சர் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.தற்போது இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்சில் விளையாடி வருகிறது.17 ஓவர்களில் 1 விக்கெட்டை இழந்து இங்கிலாந்து அணி 58 ரன்கள் அடித்துள்ளது.களத்தில் ரூட் 3*,ஜோ டேன்லீ 23* ரன்களுடன் உள்ளனர்.