பஞ்சாப் அணியில் 12 கோடிக்கு தக்கவைக்கப்பட்ட மயங்க் அகர்வால் பஞ்சாப் கிங்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு மயங்க் அகர்வாலை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். பஞ்சாப் கிங்ஸ் அணி மயங்க் அகர்வாலை 12 கோடிக்கு அவரை அணி தக்க வைத்துக் கொண்டது. அவர் 2018 முதல் இந்த அணியின் ஒரு அங்கமாக உள்ளார். கடந்த சீசனில் கே.எல்.ராகுல் கேப்டனாக இருந்தபோது, சில போட்டிகளில் அவர் இல்லாத நேரத்தில் மயங்க் பஞ்சாப் அணிக்கு கேப்டனாகவும் இருந்தார்.
பஞ்சாப் அணி இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை. 2011 ஆம் ஆண்டு ஐபிஎல்லில் அறிமுகமான மயங்க் இதுவரை 100 போட்டிகளில் விளையாடி 2,135 ரன்கள் எடுத்துள்ளார். 95 இன்னிங்ஸ்களில் 1 சதம் மற்றும் 11 அரைசதங்கள் அடித்துள்ளார். மயங்கிற்கு முன், கே.எல். ராகுல் பஞ்சாப் கிங்ஸ் கேப்டனாக இருந்தார். மெகா ஏலத்திற்கு முன், ராகுல் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இதற்குப் பிறகு, லக்னோ அணி ஐபிஎல் ஏலத்திற்கு முன்பாகவே கே.எல். ராகுலை வாங்கியது.
ஐபிஎல் 2022 மார்ச் 26 முதல் தொடங்கி இறுதிப் போட்டி மே 29 அன்று நடைபெறவுள்ளது.
கொல்கத்தா: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய கிரிக்கெட் அணியுடன் 5 டி20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர்,…
ஜல்கான் : மகாராஷ்டிராவின் ஜல்கான் மாவட்டத்தில் நடந்த ரயில் விபத்தில் 6 பேர் உயிரிழப்பு என தகவல் வெளியாகியுள்ளது. தண்டவாளத்தில்…
சென்னை: மதுரை மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என…
சென்னை : சந்தானம் ஒரு காலத்தில் தொடர்ச்சியாக காமெடியான கதாபாத்திரங்களை தேர்வு செய்து மட்டுமே திரைப்படங்களில் நடித்து வந்த நிலையில், திடீரென்று…
பாகிஸ்தான் : 2025 ஆம் ஆண்டுக்கான ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. எனவே, எந்த நாட்டில்…
மும்பை : சைஃப் அலிகான் நேற்று லீலாவதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். சைஃப் தற்போது நலமாக உள்ளார். கடந்த…