பஞ்சாப் அணிக்கு புதிய கேப்டன் அறிவிப்பு ..!
பஞ்சாப் அணியில் 12 கோடிக்கு தக்கவைக்கப்பட்ட மயங்க் அகர்வால் பஞ்சாப் கிங்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு மயங்க் அகர்வாலை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். பஞ்சாப் கிங்ஸ் அணி மயங்க் அகர்வாலை 12 கோடிக்கு அவரை அணி தக்க வைத்துக் கொண்டது. அவர் 2018 முதல் இந்த அணியின் ஒரு அங்கமாக உள்ளார். கடந்த சீசனில் கே.எல்.ராகுல் கேப்டனாக இருந்தபோது, சில போட்டிகளில் அவர் இல்லாத நேரத்தில் மயங்க் பஞ்சாப் அணிக்கு கேப்டனாகவும் இருந்தார்.
பஞ்சாப் அணி இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை. 2011 ஆம் ஆண்டு ஐபிஎல்லில் அறிமுகமான மயங்க் இதுவரை 100 போட்டிகளில் விளையாடி 2,135 ரன்கள் எடுத்துள்ளார். 95 இன்னிங்ஸ்களில் 1 சதம் மற்றும் 11 அரைசதங்கள் அடித்துள்ளார். மயங்கிற்கு முன், கே.எல். ராகுல் பஞ்சாப் கிங்ஸ் கேப்டனாக இருந்தார். மெகா ஏலத்திற்கு முன், ராகுல் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இதற்குப் பிறகு, லக்னோ அணி ஐபிஎல் ஏலத்திற்கு முன்பாகவே கே.எல். ராகுலை வாங்கியது.
ஐபிஎல் 2022 மார்ச் 26 முதல் தொடங்கி இறுதிப் போட்டி மே 29 அன்று நடைபெறவுள்ளது.
???? Attention #SherSquad ????
Our ????© ➜ Mayank Agarwal
Send in your wishes for the new #CaptainPunjab ????#SaddaPunjab #PunjabKings #TATAIPL2022 @mayankcricket pic.twitter.com/hkxwzRyOVA
— Punjab Kings (@PunjabKingsIPL) February 28, 2022